Spain vs Women Rights: ஊதியத்துடன் மாதவிடாய் விடுப்பை அறிமுகப்படுத்தும் ஸ்பெயின்

வலிமிகுந்த மாதவிடாய் மற்றும் கருக்கலைப்புக்கு ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பைக் கொண்டுவர ஸ்பெயின் திட்டமிட்டுள்ளது. இதற்கான அந்நாட்டின் முயற்சிகள் சட்டமாக மாறவிருக்கிறது.

மாதவிடாய் விடுப்பு மசோதாவுக்கு ஸ்பெயின் அமைச்சரவை ஒப்புதல் வழங்கிவிட்டது. இதன் மூலம் மாதவிடாய்க்காக பெண் ஊழியர்களுக்கு  விடுப்பு வழங்கும் முதல் ஐரோப்பிய நாடு ஸ்பெயின் ஆகும்.

கருக்கலைப்பு உரிமைகளை வலுப்படுத்தும் சிறுபான்மை இடதுசாரி அரசாங்கத்தின் வரைவு மசோதா சட்டமானால், பெண்களுக்கு ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுமுறையை அறிமுகப்படுத்தும் முதல் ஐரோப்பிய நாடு என்ற சாதனையை ஸ்பெயின் படைக்கும்.

மேலும் படிக்க | தைவான் விஷயத்தை பகடைக்காயாக பயன்படுத்துகிறதா அமெரிக்கா

இந்த மசோதா சட்டமானால் பெண்களுக்கு கிடைக்கும் உரிமைகள் இவை:
கருக்கலைப்புக்கான அணுகல்
ஸ்பெயின் ஊடகங்களால் கசிந்துள்ள இந்த வரைவு மசோதா, பொது சுகாதார அமைப்பில் கருக்கலைப்பை எளிதாக அணுக அனுமதிக்கிறது.

விதிகளின் கீழ், கர்ப்பத்தை நிறுத்த விரும்பும் அனைத்து பெண்களுக்கும் மூன்று நாள் கட்டாய பிரதிபலிப்பு காலம் (three-day mandatory reflection period) அகற்றப்படும். 16 வயதை அடைந்த  பெண்கள், பெற்றோரின் அனுமதியின்றி கர்ப்பத்தை கலைத்துக் கொள்ள முடியும்.

மாதவிடாய் ஆரோக்கியம்
வலிமிகுந்த மாதவிடாயால் பாதிக்கப்படும் பெண்களுக்கு, ஊதிய விடுப்பு கிடைக்கும். பள்ளிகள், சிறைச்சாலைகள், பெண்கள் சுகாதார வசதிகள் மற்றும் பிற பொது நிறுவனங்களில் மாதவிடாய் பொருட்கள், டம்பான்கள் மற்றும் மாதவிடாய் கோப்பைகள் இலவசமாக விநியோகிக்கப்படும்.

கல்வி
பள்ளிகளில் கல்வியின் ஒருங்கிணைந்த பகுதியாக, பாலியல் கல்வி இருக்கும்.பாலியல் ஆரோக்கியம் மற்றும் இனப்பெருக்க உரிமைகளில் நிபுணத்துவம் வாய்ந்தவர்களின் ஆலோசனைகள் பெண்களுக்குக் கிடைக்கும்.

இதற்கான பிரத்யேக தொலைபேசி இணைப்புடன் பொது பாலியல் மற்றும் இனப்பெருக்க மையங்கள் உருவாக்கப்படும்.

கருத்தடை மருந்துகள்
பொது சுகாதார காப்பீட்டின் கீழ், நவீன கருத்தடை மாத்திரைகள் வழங்கப்படும். ஆண்களுக்கான கருத்தடை விருப்பங்களையும், ஸ்பெயினின் புதிய சட்டம் ஊக்குவிக்கும்.

health

பெண்ணுக்கு எதிரான வன்முறை
முன்மொழியப்பட்ட விதிகளின்படி, வாடகைத் தாய் முறை, ஊனமுற்ற பெண்களை கட்டாயமாக கருத்தடை செய்தல் மற்றும் கட்டாய கர்ப்பம், கட்டாய கருக்கலைப்பு அனைத்தும் பெண்களுக்கு எதிரான வன்முறையாக கருதப்படும்.

மகப்பேறு விடுப்பு
கருவுற்ற 39 வது வாரத்தில் இருந்து அரசு நிதியுதவியுடன் கூடிய பிரசவத்திற்கு முந்தைய விடுப்பும் இந்த சட்டத்தின்படி கிடைக்கும்.

செலவு
ஸ்பெயினின் 2021 ஜிடிபியில் மொத்த ஆண்டுச் செலவுகள் சுமார் 0.011% ஆக இருக்கும் என்று அந்நாட்டு அரசு மதிப்பிட்டுள்ளது, மகப்பேறுக்கு முந்தைய விடுப்பு அந்த செலவில் பாதியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | பாலியல் பிரச்சனைக்கு வயாகரா தேவையில்லை; மாதுளையே போதும்..!!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.