Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.110.85 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 100.94 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
சமையல் கேஸ் சிலிண்டர் விலை உயர்வு!
சென்னையில் வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ. 3 உயர்ந்து ரூ. 1,018 ஆகவும், வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டரின் விலை ரூ. 8 உயர்ந்து ரூ. 2,507க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இம்மாதத்தில் மட்டும் வீட்டு உபயோக சிலிண்டர் விலை இரு முறை உயர்ந்துள்ளது. முதல் முறை, ரூ.50 அதிகரித்து 1,015 ரூபாய்க்கு விற்பனையானது குறிப்பிடத்தக்கது.
IPL 2022: லக்னோ அணி திரில் வெற்றி!
ஐபிஎல் போட்டியில் நேற்று கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில், லக்னோ அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. முதலில் ஆடிய லக்னோ அணி, 20 ஓவரில் 210 ரன்கள் எடுத்தது. 211 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 208 ரன்கள் எடுத்து, 2 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
இதன்மூலம் லக்னோ அணி 14 போட்டிகளில் 18 புள்ளிகளை பெற்று, பிளே ஆஃப் சுற்றுக்குள் 2வது அணியாக நுழைந்தது.
Tamil News Latest Updates
5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!
தென்பெண்ணை ஆற்றின் நீர்பிடிப்பு பகுதிகள் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொடர் மழையால், கே.ஆர்.பி. அணைக்கு நீர்வரத்து 2 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால் கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் ஆகிய 5 மாவட்ட கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
பேரறிவாளனை கட்டியணைத்து நெகிழ்ந்தேன்!
30 ஆண்டுகளுக்கும் மேலான சிறைவாசத்தை வென்று திரும்பியுள்ள சகோதரர் பேரறிவாளனை சந்தித்துக் கட்டியணைத்து நெகிழ்ந்தேன் – முதல்வர் ஸ்டாலின்!
30 ஆண்டுகளுக்கும் மேலான சிறைவாசத்தை வென்று திரும்பியுள்ள சகோதரர் பேரறிவாளன் அவர்களைச் சந்தித்துக் கட்டியணைத்து நெகிழ்ந்தேன்!
சகோதரர் பேரறிவாளன் தனக்கென இல்லற வாழ்க்கையை அமைத்துக்கொண்டு மகிழ்ச்சியாக வாழ வேண்டுமென அவரையும் அற்புதம்மாள் அவர்களையும் கேட்டுக் கொண்டேன். pic.twitter.com/M0sOXsYkop
— M.K.Stalin (@mkstalin) May 18, 2022
நடிகர் விஜய், தெலங்கானா முதல்வர் சந்திப்பு!
நடிகர் விஜய், தெலங்கானா முதல்வர் சந்திர சேகர் ராவ்வை மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினார். இந்த புகைப்படங்கள் இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டம் வரும் 30ம்தேதி நடைபெறும். அனைத்து மாமன்ற உறுப்பினர்களும் தவறாமல் கலந்து கொள்ள மேயர் பிரியா ராஜன் அறிவுறுத்தி உள்ளார்.
பேரறிவாளன் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழக காங்கிரஸ் இன்று போராட்டம் நடத்துகிறது. வெள்ளை துணியால் வாயைக் கட்டிக் கொண்டு முக்கிய இடங்களில் இன்று காலை 10 மணி முதல் 11 மணி வரை அறப்போராட்டம் நடத்த கட்சியினருக்கு கே.எஸ்.அழகிரி அழைப்பு விடுத்துள்ளார்.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோவிலில் கனகசபை மீது ஏறி பக்தர்கள் வழிபட அனுமதி வழங்கி அரசாணை வெளியிட்டுள்ளது. பக்தர்களின் கோரிக்கை மற்றும் சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி விதிகளை பின்பற்றி தரிசனம் செய்வதற்கு தமிழக அரசு அனுமதியளித்துள்ளது.
காஞ்சிபுரம், வரதராஜ பெருமாள் கோவிலில் வைகாசி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு தேரோட்டம் தொடங்கியது. ஆயிரகணக்கான பக்தர்கள் வடம் இழுத்து சாமி தரிசனம் செய்தனர்.
கோவை, வ.உ.சி. மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள ’பொருநை’ கண்காட்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடக்கி வைக்கிறார். அவினாசியில் நடைபெறும் தொழில் முனைவோர்கள் ஆலோசனை கூட்டத்திலும் ஸ்டாலின் பங்கேற்கிறார்.
தமிழ்நாட்டில் அடுத்த 3 நாட்களுக்கு பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளது. 17 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை கோயேம்பேட்டில் மொத்த விலையில் ஒரு கிலோ தக்காளி விலை ரூ.10 உயர்ந்து ரூ. 100க்கு விற்பனையாகிறது. வரத்து குறைந்ததால் தக்காளி விலை 20வது நாளாக உயர்ந்துள்ளது.
தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் கூடுதலாக நியமிக்கப்பட்ட 3 ஆயிரம் ஆசிரியர்களுக்கு மேலும் ஓராண்டு பணி நீட்டிக்கப்பட்டுள்ளது. 3 ஆயிரம் பேருக்கு ஊதியம், இதர படிகளை வழங்கிடவும் பள்ளிக்கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.