அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சல்லிவன், சீனாவின் உயர்மட்ட இராஜதந்திரி யாங் ஆகியோர் வட கொரியா மற்றும் தைவானுடன் பேசினர்.
பிராந்தியத்தில், தனதுநட்பு நாடுகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, அமெரிக்கா இராணுவ நிலைப்பாட்டில் குறுகிய மற்றும் நீண்ட கால மாற்றங்களைச் செய்யத் தயாராக இருப்பதாக அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சல்லிவன் தெரிவித்தார்.
அமெரிக்கா தரப்பில் சல்லிவனும், சீனாவின் தரப்பில் சீனாவின் உயர்மட்ட அதிகாரி யாஙாகிய இருவரும் உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் போர் மற்றும் “அமெரிக்க-சீனா உறவுகளில் குறிப்பிட்ட பிரச்சினைகள்” பற்றிய கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டதாக முன்னதாக வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கை ஒன்றில் கூறியது.
அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் மற்றும் சீனாவின் உயர்மட்ட ராஜதந்திரி யாங் ஜீச்சி ஆகியோர் வட கொரியா மற்றும் தைவான் தொடர்பான பல பிரச்சினைகள் குறித்து விவாதித்ததாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. பிராந்திய பாதுகாப்பு மற்றும் அணு ஆயுத பரவல் தடை குறித்தும் இரு நாட்டு உயர்நிலை அதிகாரிகளும் கலந்துரையாடினார்கள்.
மேலும் படிக்க | வட கொரியாவில் ஒரே நாளில் 2.3 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு காய்ச்சல்
இந்த ஆலோசனையின்போது, அணு ஆயுதம் அல்லது ஏவுகணை சோதனைகளை வட கொரியா நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டதாக சல்லிவன் தெரிவித்தார்.
அமெரிக்க அதிபர், ஜோ பிடனின் தென் கொரியா மற்றும் ஜப்பான் பயணத்தை சுற்றி அணு ஆயுத சோதனை நடத்த வட கொரியா தயாராகி வருவதாக அமெரிக்க உளவுத்துறைக்கு தகவல்கள் கிடைத்திருப்பதாக வெள்ளை மாளிகையில் நடைபெற்ற இந்த கலந்தாலோசனையின்போது சல்லிவன் தெரிவித்தார்.
அமெரிக்க அதிபர் இன்னும் சில நாட்களில் இந்த நாடுகளுக்கு செல்லவுள்ளதை அடுத்து இந்த ஆலோசனை கலப்பு மேற்கொள்ளப்பட்டது.
பிராந்தியத்தில் அதன் நட்பு நாடுகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, தனது இராணுவ நிலைப்பாட்டில் குறுகிய மற்றும் நீண்ட கால மாற்றங்களைச் செய்ய அமெரிக்கா தயாராக இருப்பதாக சல்லிவன் கூறினார்.
மேலும் படிக்க | டெர்ம் இன்சூரன்ஸ் திட்டத்தை எதற்காக எடுக்க வேண்டும்?
“நான் இன்று காலை எனது சீனப் பிரதிநிதியுடன் பேசினேன், DPRK இன் இந்த சிக்கலைப் பற்றி பேசினேன்,” யாங்குடனான தனது ஆலோசனை கலப்பைப் பற்றி சல்லிவன் கூறினார்.
உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் போர் மற்றும் “அமெரிக்க-சீனா உறவுகளில் குறிப்பிட்ட பிரச்சினைகள்” பற்றிய கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டதாக, இந்த இருதரப்பு பேச்சுவார்த்தைத் தொடர்பாக வெள்ளை மாளிகை ஏற்கனவே தெரிவித்திருந்தது.
“அமெரிக்கத் தரப்பு ‘தைவான் கார்டு’ விளையாடுவதில் தொடர்ந்து மேலும் தவறான பாதையில் சென்றால், அது நிச்சயமாக நிலைமையை கடுமையான ஆபத்தில் கொண்டு நிறுத்தும்” என்று யாங் சல்லிவனிடம் கூறியதாக சின்ஹுவா கூறுகிறது.
சீனாவும் இறையாண்மை மற்றும் பாதுகாப்பு நலன்களைப் பாதுகாக்க “உறுதியான நடவடிக்கைகளுக்கு” செல்லும் என்று யாங்கை மேற்கோள் காட்டி சின்ஹுவா தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க | SIP முதலீட்டில் ஏகப்பட்ட லாபம்: இந்த அம்சங்களில் தெளிவு தேவை
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!