அமெரிக்காவில் கார் திருட்டில் ஈடுபட்ட 13 வயது சிறுவன் போலீசாரால் சுட்டு கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.
சிகாகோ நகரில் 3 வயது சிறுமி அமர்ந்திருந்த காரை, 13 வயது சிறுவன் உள்பட 4 பேர் திருடிச் சென்றனர்.
சற்று தொலைவில் காரை விட்டு விட்டு அந்த கும்பல் தப்பி சென்றது. காரில் இருந்த சிறுமி பத்திரமாக மீட்கப்பட்டார்.
மறுநாள் இந்த கும்பலுக்குச் சொந்தமான காரை போலீசார் தடுத்து நிறுத்த முயன்ற போது அந்த சிறுவன் காரில் இருந்து தப்பி ஓடியுள்ளான். அவனை விரட்டி சென்று காவலர் ஒருவர் சுட்டதில் அவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான்.