அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி வேலையில்லா இளைஞர்களிடம் நில மோசடி செய்த குற்றச்சாட்டில் லாலு பிரசாத் யாதவ், அவர் மகள் மிசா பாரதி ஆகியோர் மீது வழக்குப் பதிந்துள்ள சிபிஐ அதிகாரிகள் டெல்லி, பீகாரில் 17 இடங்களில் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
2004 – 2009 காலக்கட்டத்தில் லாலு பிரசாத் ரயில்வே அமைச்சராக இருந்தபோது இளைஞர்களுக்கு அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி அவர்களிடம் இருந்த நிலங்களைப் பெற்றுக்கொண்டு வேலை வாங்கிக் கொடுக்காமல் ஏமாற்றியதாகக் குற்றச்சாட்டுக்கள் உள்ளன.
இதுகுறித்து லாலு பிரசாத், அவர் மகள் மிசா பாரதி ஆகியோர் முது புதிதாக லஞ்ச ஊழல் வழக்கை சிபிஐ பதிந்துள்ளது.
இதையடுத்து டெல்லி, பாட்னா உள்ளிட்ட 17 இடங்களில் லாலு பிரசாத்துக்குச் சொந்தமான இடங்களில் சிபிஐ அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் லாலு ஜாமீன் பெற்ற ஒரு வாரத்தில் இந்தச் சோதனை நடைபெறுவது குறிப்பிடத் தக்கது.