மும்பை: இந்திய பங்குச் சந்தை குறியிட்டு எண்கள் 2.9% அதிகரித்து உள்ள நிலையிலும் எல்.ஐ.சி பங்கு விலை 1.72% சரிந்துள்ளது. தொடர்ந்து விலை குறைந்து வரும் எல்.ஐ.சி பங்கு வெள்ளிக்கிழமை மேலும் ரூ 14.50 சரிந்ததால் முதலீட்டார்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். வியாழக்கிழமை ரூ.840.75-ல் நிலைபெற்ற எல்.ஐ.சி பங்கு விலை வெள்ளிக்கிழமை வர்த்தகத்தின் போதும் சரிவடைந்தது.