இந்தோனேசியா பாமாயில் ஏற்றுமதி மீதான தடை நீக்கம்.. சமையல் எண்ணெய் விலை எப்போது குறையும்?

உலகின் மிகப் பெரிய பாமாயில் உற்பத்தி நாடானா இந்தோனேசிய பாமாயில் ஏற்றுமதிக்கு விதித்திருந்த தடையை அடுத்த வாரம் முதல் நீக்குவதாக அறிவித்துள்ளது.

தென்கிழக்கு ஆசிய நாட்டிலிருந்து பாமாயிலை அதிக அளவில் இறக்குமதி செய்யும் நாடாக இந்தியா இருப்பதால், விரைவில் இங்கு விலை குறையும் என கூறப்படுகிறது. எனவே எப்போது முதல் இந்தியாவில் சமையல் எண்ணெய் விலை குறையும் என இங்கு விளக்கமாகப் பார்க்கலாம்.

பாமாயில் தட்டுப்பாடு

உலகம் நாடுகளில் போர் காரணமாகச் சமையல் எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வந்தது. எனவே பல நாடுகளில் பாமாயில் இறக்குமதி வரியை குறைத்து அதிகளவில் எண்ணெய் உற்பத்தியைத் தொடங்கினார். அதன் எதிரொலியாக இந்தோனேசியாவில் பாமாயில் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவானது.

பாமாயில் ஏற்றுமதி தடை

பாமாயில் ஏற்றுமதி தடை

எனவே இந்தோனேசியாவில் பாமாயில் எண்ணெய் ஏற்றுமதிக்கு ஏப்ரல் 28-ம் தேதி முதல் தடை விதிக்கப்பட்டது. தொடர்ந்து உலகம் முழுவதும் பாமாயில் எண்ணெய் விலை அதிகரித்து, சமையல் எண்ணெய் விலையும் அதிகரித்தது.

மலேஷியா
 

மலேஷியா

இந்தோனேசியாவுக்கு அடுத்தபடியாக பாமாயில் ஏற்றுமதி செய்யும் நாடான மலெஷியா இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள பாமாயில் ஏற்றுமதி மீதான வரியை ஜூன் மாதம் முதல் குறைக்கத் திட்டமிட்டு இருந்தது. இந்நிலையில் இந்தோனேசியா பாமாயில் எண்ணெய் மீதான தடையை நீக்கியுள்ளது.

சமையல் எண்ணெய் எப்போது விலை குறையும்?

சமையல் எண்ணெய் எப்போது விலை குறையும்?

இந்தோனேசியாவில் 15 நாட்களுக்கு அதிகமாக பாமாயிலை உற்பத்தி செய்து சேமித்து வைக்க இடமில்லை. எனவே விரைவில் ஏற்றுமதி மீதான தடையை நீக்கி மீண்டும் எண்ணெய் வர்த்தகம் தொடங்கும் என அதானி விலமர் நிறுவனம் கூறியிருந்தது. அப்போது மே 10-ம் தேதி தடை நீக்கப்பட்டால் ஜூன் மாத இறுதியிலிருந்து விலை குறையும் என தெரிவித்து இருந்தனர்.

பாமாயில் ஏற்றுமதி மீதான தடை நீக்கம்

பாமாயில் ஏற்றுமதி மீதான தடை நீக்கம்

ஆனால் இப்போது இந்தோனேசியா மே மாத இறுதியில் தான் பாமாயில் ஏற்றுமதி மீதான தடையை நீக்க உள்ளதாக அறிவித்துள்ளது. எனவே ஜூலை மாதம் முதல் வாரத்திலிருந்து பாமாயில் விலை குறைந்து , பிற சமையல் எண்ணெய் விலையும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா

இந்தியா

இந்தியா ஒவ்வொரு ஆண்டும் 8 மில்லியன் டன் பாமாயிலை இந்தோனேசியாவிலிருந்து இறக்குமதி செய்கிறது. இந்தோனேசியாவில் ஆண்டுக்கு 48 மில்லியன் டன் பாமாயில் உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்யப்படுகிறது.

விலை உயர்ந்த பொருட்கள் விலை

விலை உயர்ந்த பொருட்கள் விலை

பாமாயில் விலை அதிகரிக்கப்பட்டதால், சமையல் எண்ணெய் விலை மட்டுமல்லாமல், அதனை பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் சோப், ஷாம்பு, பிஸ்கட், நூடல்ஸ் உள்ளிட்ட பொருட்களின் விலையும் அதிகரித்தது.

 பணவீக்கம்

பணவீக்கம்

உணவு மற்றும் எரிபொருள் விலை உயர்வால் இந்தியாவில் பணவீக்கம் மிகப் பெரிய அளவில் அதிகரித்துள்ளது. மார்ச் மாதம் 7.68 சதவீதமாக இருந்த உணவு பொருட்கள் மீதான பணவீக்கம், ஏப்ரல் மாதம் 8.38 சதவீதமாக அதிகரித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Indonesia Lifted Ban On Palm Oil Export. When Cooking Oil Price Will Come Down In India?

Indonesia Lifted Ban On Palm Oil Export. When Cooking Oil Price Will Come Down In India? Indonesia Lifted Ban On Palm Oil Export. When Cooking Oil Price Will Come Down In India? | இந்தோனேசியா பாமாயில் ஏற்றுமதி மீதான தடை நீக்கம்.. சமையல் எண்ணெய் விலை எப்போது குறையும்?

Story first published: Friday, May 20, 2022, 22:29 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.