பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்கும் இலங்கைக்கு உதவுவதாக G7 நாடுகள் அறிவித்துள்ளமையை பிரதமர் ரணில் விக்ரமசிங்க வரவேற்றுள்ளார்.
இலங்கை சுதந்திரம் பெற்ற பின்னர் மிக மோசமான நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது.
கடுமையான அந்நியச் செலாவணி பற்றாக்குறையை இலங்கை எதிர்கொண்டுள்ளது.
இதன் காரணமாக விலை அதிகரிப்பு மற்றும் எரிபொருள், சமையல் எரிவாயு, உணவு மற்றும் மின்சாரத்திற்கான வெப்ப எரிபொருள் பற்றாக்குறைக்கு வழிவகுத்ததுள்ளது.
இவ்வாறான நிலையில், இலங்கைக்கு உதவுவதாக G7 நாடுகள் அறிவித்துள்ளன.
இந்நிலையில், கடன் நிவாரணத்தைப் பெறுவதற்கு இலங்கைக்கு உதவுவதாக G7 நாடுகள் வெளியிட்டுள்ள அறிவிப்பை நான் வரவேற்கிறேன் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கை கடன் நிவாரண உதவிகளை வழங்குவதாக ஜி7 நாடுகள் அறிவித்துள்ளன. அதனை நான் வரவேற்கிறேன். இலங்கை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு சர்வதேச நாடுகளின் தொடர்ச்சியான பங்களிப்பு மிகமுக்கியமான ஒன்றாகும்#SriLankaEconomicCrisis
— Ranil Wickremesinghe (@RW_UNP) May 20, 2022
இலங்கையுடனான சர்வதேச சமூகத்தின் தொடர்ச்சியான ஈடுபாடு பொருளாதார நெருக்கடியைச் சமாளிப்பதற்கு முக்கியமானது” என்று விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து தனது அதிகாரபூர் டுவிட்டர் பக்கத்தில் விடுத்துள்ள பதிவொன்றில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இதனிடையே, இலங்கையில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு உதவும் வகையில் 1.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியை ஜப்பான் அரசாங்கம் வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது.
இந்த நிதியானது ஐக்கிய நாடுகளின் உலக உணவுத் திட்டத்தால் (WFP) குழந்தைகள் மற்றும் ஆதரவு தேவைப்படும் குடும்பங்களுக்கு உணவு உதவி வழங்கப் பயன்படுத்தப்படும்.