ரஷ்யா உக்ரைனில் புதிய லேசர் ஆயுதங்களைப் பயன்படுத்துவதாக கூறியுள்ளதை உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி ‘அதிசய ஆயுதம்’ என்று கேலி செய்துள்ளார்.
உக்ரைனில் புதிய தலைமுறை சக்திவாய்ந்த லேசர்களைப் பயன்படுத்தி ட்ரோன்களை எரிப்பதாகவும், உக்ரைனில் குவிக்கப்படும் மேற்கத்திய ஆயுதங்களை எதிர்கொள்ள சில ரகசிய ஆயுதங்களை நிலைநிறுத்தியுள்ளதாகவும் ரஷ்யா புதன்கிழமை கூறியது.
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் 2018-ல் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை, நீருக்கடியில் அணுசக்தி ட்ரோன்கள், ஒரு சூப்பர்சோனிக் ஆயுதம் மற்றும் லேசர் ஆயுதம் ஆகியவற்றை வெளியிட்டார்.
புதிய லேசரின் பிரத்தியேகங்கள் பற்றி அதிகம் அறியப்படவில்லை. ஆனால், பெரெஸ்வெட் என்று ஒரு இரன்டுவ வீரனின் பெயரில் ஒரு ஆயுதத்தை மட்டும் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், இராணுவ வளர்ச்சிக்குப் பொறுப்பான ரஷ்ய துணைப் பிரதமர் யூரி போரிசோவ், மாஸ்கோவில் நடைபெற்ற மாநாட்டில், பெரெஸ்வெட் ஏற்கனவே பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும், அது பூமியிலிருந்து 1,500 கிமீ உயரத்தில் உள்ள செயற்கைக்கோள்களைக் குருடாக்கும் அளவிற்கு சக்திவாய்ந்தது என்றும் கூறினார்.
ட்ரோன்கள் மற்றும் பிற உபகரணங்களை எரிக்கக்கூடிய பெரெஸ்வெட்டை விட சக்திவாய்ந்த அமைப்புகள் ஏற்கனவே இருப்பதாக அவர் கூறினார். போரிசோவ் செவ்வாயன்று ஒரு சோதனையை மேற்கோள் காட்டினார், இது ஐந்து வினாடிகளில் 5 கிமீ தொலைவில் ஒரு ட்ரோனை எரித்ததாக அவர் கூறினார்.
உக்ரைனில் இதுபோன்ற ஆயுதங்கள் பயன்படுத்தப்படுகிறதா என்று கேட்டதற்கு, போரிசோவ் கூறினார்: “ஆம். முதல் முன்மாதிரிகள் ஏற்கனவே அங்கு பயன்படுத்தப்படுகின்றன.” அந்த ஆயுதம் “ஜாதிரா” (Zadira) என்று அழைக்கப்பட்டது என்றார்.
இந்நிலையில், உக்ரேனிய ஜனாதிபதி Volodymyr Zelenskiy, லேசர்கள் பற்றிய செய்திகளை இரண்டாம் உலகப் போரில் தோல்வியைத் தடுக்கும் முயற்சியில் நாஜி ஜேர்மனி வெளியிட்ட அதிசய ஆயுதங்கள் என்று அழைக்கப்படும் கேலி செய்யும் வகையில் ஒப்பிட்டார்.
“அவர்களுக்கு போரில் எந்த வாய்ப்பும் இல்லை என்பது தெளிவாகத் தெரிந்ததால், ஒரு திருப்புமுனையை உறுதிசெய்யும் அளவுக்கு சக்தி வாய்ந்த ஒரு அற்புதமான ஆயுதம் பயன்படுத்தப்படுகிறது என்னு பிரச்சாரம் செய்யப்படுகிறது” என்று அவர் கூறினார்.
“ஒரு முழு அளவிலான போரின் மூன்றாவது மாதத்தில், ரஷ்யா தனது ‘அதிசய ஆயுதத்தை’ கண்டுபிடிக்க முயற்சிப்பதை நாங்கள் காண்கிறோம்… இவை அனைத்தும் ரஷ்யாவின் முழுமையான தோல்வியை தெளிவாகக் காட்டுகிறது” என்றும் கூறினார்.