ஒய்எஸ்ஆர் ஜெகன் அண்ணா நிலஉரிமை, பாதுகாப்பு திட்டத்திற்கு மாநிலம் முழுவதும் நில சர்வே பணிகள்-வீடியோகான்பரன்சிங்கில் சிறப்பு அதிகாரி தகவல்

திருப்பதி : ஒய்எஸ்ஆர் ஜெகன் அண்ணா நில உரிமை மற்றும் பாதுகாப்பு திட்டத்திற்கு மாநிலம் முழுவதும் நில சர்வே பணிகள் தொடங்கப்பட்டுள்ளது என வீடியோ கான்பரசிங்கில் சிறப்பு அதிகாரி தெரிவித்தார்.ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் இருந்து ஒய்.எஸ்.ஆர் ஜெகன் அண்ணா நில உரிமை மற்றும் நில பாதுகாப்பு கணக்கெடுப்பு திட்ட மாநில சிறப்பு அதிகாரி சாய் பிரசாத் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். அதன்படி திருப்பதி கலெக்டர் அலுவலகத்தில் இருந்து கலெக்டர் வெங்கட ரமணா மற்றும் இணை கலெக்டர் பாலாஜி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் மாநில சிறப்பு அதிகாரி சாய் பிரசாத் கூறுகையில், ஒய்எஸ்ஆர் ஜெகன் அண்ணா நில உரிமை மற்றும் பாதுகாப்பு திட்டத்திற்கு மாநிலம் முழுவதும் நில சர்வே பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. மாவட்டம் தோறும் கமென்ட் கன்ட்ரோல் அமைத்து மாவட்ட அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என்றார். அப்போது, கலெக்டர் வெங்கட்ரமணா கூறும்போது, திருப்பதி மாவட்டத்தில் 34 மண்டலங்கள், 1050 கிராமங்கள் உள்ளது. 14,72,601 ஏக்கர் நிலம் அளவீடு செய்ய வேண்டியுள்ளது. முதற்கட்டமாக 312 கிராமங்களிலும், இரண்டாவது கட்டமாக 343 கிராமங்களிலும், மூன்றாவது கட்டமாக 395 கிராமங்களிலும் சர்வே செய்யப்படும். இதற்காக சர்வேயர்களுக்கு சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளது. ட்ரோன்  மூலமாக சர்வே செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது என்று தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.