காஞ்சிபுரம் அருகே மது போதைக்கு அடிமையான தந்தை, தனது இரு மகள்களையும் கட்டையால் தாக்கி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடம் அடுத்த சின்னமதுரப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தாராஜ் (வயது 37). கூலித்தொழிலாள் செய்துவரும் இவர் மது பழக்கத்துக்கு ஆளாகியவர்.
மேலும், அடிக்கடி குடித்து விட்டு வந்து வீட்டில் தகராறு செய்து வந்துள்ளார். இந்த நிலையில் சம்பவநாளன்று மது குடித்து விட்டு, வீட்டில் இருந்த அவரின் மகள்களான நந்தினி (வயது 16), தீபா(வயது 9) கட்டையால் அடித்து உள்ளார்.
இதில் இரு சிறுமிகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சிறுமிகளின் மரண உள்ளம் கேட்டு வந்தவர்கள் கோவிந்தராஜை பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
கோவிந்தராஜை கைது செய்த போலீசார், உயிரிழந்த இரு சிறுமிகளின் உடலையும் பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கோவிந்தராஜிடம் போலீசார் நடத்திய விசாரணையில், இவரின் 2வது மகளாக இருந்து வந்த நதியா(14) ஏற்கனவே இவரின் தொல்லை தங்க முடியாமல் உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி கடந்த ஆண்டு தீ வைத்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.
தகப்பனின் மது பழக்கத்தால் ஒன்றும் அறியாத 3 பெண்குழந்தைகள் பலியாகி இருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.