இணையத்திலும் சமூக ஊடகங்களிலும் வெளியாகும் ஆப்டிகல் இலுசியன் படங்கள் சில நேரங்களில் நம் ஆளுமையின் துல்லியமாகக் குறிப்பிட்டு ஆச்சரியப்படுத்தும். ஒரு ஆப்டிகல் இலுசியன் படத்தைப் பார்ப்பதில் ஒவ்வொருவரும் வெவ்வேறு கண்ணோட்டத்தில், கோணத்தில் பார்க்கின்றனர்.
ஆப்டிகல் இலுசியன் படங்கள் முதல் பார்வையில் ஒரு மாதிரியாகவும் உற்று கவனிக்கும்போது வேறு மாதிரியாகவும் தெரியக்கூடியவை. ஆப்டிகல் இலுசியன் படங்கள் ஒரு புதிர் பொழுதுபோக்காக இருந்தாலும், நம் ஆளுமையைத் துல்லியமாகக் குறிப்பிடுபவை என்கிறபோது அந்த படங்கள் பற்றியான ஆவலை அதிகரிக்கின்றன.
இந்த ஆப்டிகல் இலுசியன் படங்கள் முதல் பார்வையில் என்ன தெரிகிறது என்பதை வைத்து நமது ஆளுமையையும் குணநலனையும் குறிப்பிடுகின்றன. இந்த நேரத்தில், இணையத்தில் வைரலாகி வரும், உங்கள் ஆளுமையை வெளிப்படுத்தும் மற்றொரு ஆப்டிகல் இலுசியன் படத்தை தருகிறோம். இந்த படத்தைப் பார்த்து உங்கள் ஆளுமையை சரிபார்த்துக்கொள்ளுங்கள்.
டிக்டாக்கில் பயனர்களால் பகிரப்பட்ட இந்த ஆப்டிகல் இலுசியன் படம், உங்கள் இயல்பு மற்றும் சமூகத்துடன் இணங்கி வாழும் திறன்களை குறிப்பிடுகிறது. இந்த படத்தில், ஏரிக்கரையில் ஒரு ஜோடி நிற்கும் அழகான காட்சி உள்ளது. ஆனால், இந்த படத்தில் காதல் ஜோடி மட்டுமல்ல, மரக்கிளைகள் ஒரு குழந்தையின் முகத்தை உருவாக்குகின்றன. அந்த குழந்தையின் முகத்தை, முதல் பார்வையில் சிலரால் மட்டுமே பார்க்க முடியும். நீங்கள் முதலில் என்ன பார்த்தீர்கள்? என்று சொல்லுங்கள் உங்கள் ஆளுமையைத் தெரிந்துகொள்ளுங்கள்.
1 காதல் ஜோடி
இந்த படத்தில் நீங்கள் முதலில், ஜோடியைக் பார்த்தீர்கல் என்றால், உங்கள் அன்புக்குரியவர்களுக்காக நீங்கள் உண்மையிலேயே அக்கறை காட்டுகிறீர்கள் என்பதைக் காட்டுகிறது. உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினராக இருந்தாலும், அவர்களைப் பாதுகாப்பதற்கும் அவர்கள் மீது அன்பைப் பொழிவதற்கும் நீங்கள் எப்போதும் தயாராக இருக்கிறீர்கள். நீங்கள் உங்கள் அன்புக்குரியவர்களுடன் நேரத்தை செலவிட விரும்புகிறீர்கள். ஆனால் பெரிய கூட்டங்களை தவிர்க்கவ வேண்டும். நீங்கள் அதிக இரைச்சல் மற்றும் ஆட்கள் உள்ள இடங்களை விரும்பாத ஒருவர். ஆனால், இது உங்களை உள்ளார்ந்த சிந்தனையாளராக மாற்றாது. அந்நியர்களுடன் பழகுவதற்குப் பதிலாக நெருக்கமான குழுக்களை விரும்புகிறீர்கள்.
2 குழந்தையின் முகம்
உதடுகள், கண்கள் மற்றும் கன்னம் ஆகியவற்றைக் கச்சிதமாக கோடிட்டுக் காட்டும் மரக்கிளைகளால் உருவான குழந்தையின் முகத்தை நீங்கள் பார்த்திருந்தால், நீங்கள் தனிமைப்படுத்திக்கொள்கிறீர்கள். நீங்கள் உங்கள் சுயத்துடன் நேரத்தை செலவிட விரும்புகிறீர்கள். உங்கள் நிறுவனத்தை அனுபவிக்க விரும்புகிறீர்கள். எப்படியோ நீங்கள் வெளியே செல்லாமல், புதிய நபர்களைச் சந்திக்காமல் இருப்பதில் குற்ற உணர்வு கூட இருக்கிறது. ஆனால், அதுதான் நீங்கள். நீங்கள் ஒரு அமைதியானவர். உங்கள் சிறிய உலகம்தான் உங்கள் மகிழ்ச்சியான இடம்.
இந்த ஆப்டிகல் இலுசியன் படம் உங்கள் ஆளுமையையும் குண நலனையும் சரியாக சொல்லிவிட்டதா? சரியாக சொல்லிவிட்டது என்றால் ஆச்சரியாமாக இருக்கிறது இல்லையா?
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“