Tamil Health Update : உடலில ஏற்படும் பல்வேறு நோய் தொற்றுகளை குணப்படுத்த பல்வேறு மூலிகைகள் பெரிய அளவில் உதவுகினறன. அதிலும் குறிப்பாக தற்போதைய காலகட்டத்தில் அதிகம்பேர் சந்திக்கும் முக்கிய பிரச்சினையான உயர் இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் ஆகிய நோய்களை குணப்படுத்த 3 மூலிகைகள் முக்கிய பயன்களை தருகின்றன.
உலகளவில் மில்லியன் கணக்கான மக்கள் உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த இரண்டு சுகாதார நிலைகளும் இன்னும் பல உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும். இதனால் அவற்றை நிர்வகிப்பது மற்றும் கட்டுப்படுத்துவது மிகவும் அவசியமான ஒன்று
அதிகம் சிரமப்படாமல் வவீட்டு வைத்திய முறைகளை பயன்படுத்தியே இதனை கட்டுக்குள் வைக்கலாம். அந்த வகையில் துளசி,கருவேப்பிலை, வேப்பிலை ஆகிய 3 மூலிகைகளும் சரியான வழியில் உட்கொள்ளும்போது நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தலாம்.
துளசி இலைகள்
மூலிகைகளின் ராணி என்று அழைக்கப்படும் துளசி நம் உடலை பல்வேறு நோய்களிலிருந்து பாதுகாக்கிறது. துளசி இலைகளை வெறும் வயிற்றில் உட்கொள்வது வகை 2 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இரத்த குளுக்கோஸ் அளவைக் குறைப்பதாக பல ஆய்வுகள் மூலம் நிருபிக்கப்பட்டுள்ளது.
துளசி இலைகள் உடல் கொழுப்பை குறைப்பதன் மூலமும், இஸ்கிமியா, பக்கவாதம் மற்றும் உயர் இரத்த அழுத்தத்தைக் குறைப்பதன் மூலமும் இருதய நோய்களைத் தடுக்கும் என்று கூறப்படுகிறது.
துளசியில் அதிக அளவு பாதரசம் மற்றும் இரும்புச்சத்து உள்ளது, அதை நாம் மெல்லும்போது வெளிப்படும். இந்த தாதுக்கள் பற்களை சேதப்படுத்தி நிறமாற்றத்தை ஏற்படுத்தும். துளசி இலைகள் அமிலத்தன்மை கொண்டவை, இது அதிக அளவில் உட்கொள்ளும் போது பல் பற்சிப்பி தேய்மானத்தை ஏற்படுத்தும். எனவே, இந்த இலைகளை மிக்ஸியில் அரைத்து சிறிது தண்ணீரில் கலந்து சாப்பிடுவது நல்லது.
கறிவேப்பிலை இலைகள்
கறிவேப்பிலை இலைகள், இந்திய சமையலில் பயன்படுத்தப்படும் ஒரு பொதுவான சமையல் பொருளாகும். கருவேப்பிலை இலைகள் உங்கள் உணவில் நறுமணத்தை கொடுப்பதோடு மட்டுமல்லாமல் பல்வேறு ஆரோக்கிய பண்புகளையும் கொண்டுள்ளது.
கறிவேப்பிலையை தொடர்ந்து உட்கொள்வது இன்சுலின் உற்பத்தி செய்யும் செல்களைத் தூண்டுவதற்கு உதவும். இந்த செல்கள் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவுகின்றன.
வேப்பிலை
வேப்ப இலைகளிலும் பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. வேப்ப இலைகளை தினமும் உட்கொள்வது இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கும் என்பதற்கான சான்றுகள் உள்ளன. உங்களுக்கு நீரிழிவு நோய் இருந்தால், உங்கள் இரத்த சர்க்கரை அளவை தொடர்ந்து கண்கானிக்க வேண்டியது அவசியம். அதிகப்படியான நுகர்வு சில சமையங்களில் உங்கள் இரத்த சர்க்கரை அளவு மிகக் குறைத்தவிடும்.. அப்போது உங்கள் நீரிழிவு மருந்தைக் குறைக்க வேண்டியது அவசியம்.
வேப்ப இலைகளின் ஆண்டிஹிஸ்டமைன் விளைவு இரத்த நாளங்களை விரிவடையச் செய்யும். அதனால்தான் இந்த இலைகள் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவும். ஒரு மாதத்திற்கு வேப்பம்பூ சாறு அல்லது காப்ஸ்யூல்களை எடுத்துக்கொள்வது அதிக கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“