குஜராத் மற்றும் இமாச்சலப் பிரதேச மாநிலங்களில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடையும் என்று தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் கணித்துள்ளார்.
உதய்பூரில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் நடைபெற்ற காரியக் கமிட்டி கூட்டம் குறித்து டுவிட்டரில் விமர்சித்துள்ள பிரசாந்த் கிஷோர், இந்தாண்டு இறுதியில், குஜராத் மற்றும் இமாச்சலப் பிரதேச மாநில சட்டப்பேரவை தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடையும் வரை அக்கட்சியின் தலைமை பதவியை தக்க வைத்து கொள்ள சிலருக்கு உதவும் என பதிவிட்டுள்ளார்.