சமீப காலமாகவே கெமிக்கல் துறையை சேர்ந்த கெமிக்கல் பங்குகள் நல்ல ஏற்றம் கண்டு வருகின்றன. குறிப்பாக சீனாவின் முக்கிய நடவடிக்கைகளுக்கு மத்தியில், கெமிக்கல் நிறுவனங்களின் வளர்ச்சி விகிதமானது ஏற்றம் கண்டு வருகின்றது.
இதற்கிடையில் பிஐ இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனம் வாங்கலாம் என தரகு நிறுவனம் கணித்துள்ளது.
அதெல்லாம் சரி இப்பங்கினை ஏன் வாங்கணும்? அதன் இலக்கு விலை என்ன? தற்போதைய பங்கு விலை நிலவரம் என்ன? வாருங்கள் பார்க்கலாம்.
இலக்கு விலை
இப்பங்கின் இலக்கு விலையானது 26 சதவீதம் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் இலக்கு விலை 3300 ரூபாயாக ஷேர்கான் நிறுவனம் நிர்ணயம் செய்துள்ளது. கடந்த ஓராண்டுகளாக ஏற்ற இறக்கத்தினை கண்டு வரும் இப்பங்கானது, தொடர்ந்து இந்த ஆண்டு ஏற்றம் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்றைய பங்கு விலை நிலவரம்?
இன்று என் எஸ் இ-யில் இப்பங்கின் விலையானது 1.81 சதவீதம் குறைந்து, 2618.35 ரூபாயாக முடிவடைந்துள்ளது. இதன் இன்றைய அதிகபட்ச விலை 2689 ரூபாயாகும். இதன் இன்றைய குறைந்தபட்ச விலை 2604.10 ரூபாயாகும். இதன் 52 வார உச்ச விலை 3534.90 ரூபாயாகும். இதன் 52 வார குறைந்தபட்ச விலை 2333.55 ரூபாயாகும்.
இதே பி எஸ் இ-யில் இப்பங்கி விலையானது, 1.97 சதவீதம் குறைந்து, 2617.05 ரூபாயாக முடிவடைந்துள்ளது. இதன் இன்றைய அதிகபட்ச விலை 2689.30 ரூபாயாகும். இதன் இன்றைய குறைந்தபட்ச விலை 2602.10 ரூபாயாகும். இதன் 52 வார உச்ச விலை 3533.30 ரூபாயாகும். இதன் 52 வார குறைந்தபட்ச விலை 2334.35 ரூபாயாகும்.
வருவாய் வளர்ச்சி
பிஐ இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் 4வது காலாண்டு வருவாய் விகிதமானது, 16.5 சதவீதம் அதிகரித்து, 1395 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதே இதன் செயல்பாட்டின் மூலம் கிடைத்த லாப விகிதமானது 34.1 சதவீதம் அதிகரித்து, 305 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதன் புதிய பொருட்கள் விற்பனையானது, உள்நாட்டில் மிகப்பெரியளவிலான வளர்ச்சியினை கண்ட நிலையில், இதன் வருவாய் விகிதமும் அதிகரித்துள்ளது.
டிவிடெண்ட் அறிவிப்பு
இந்த நிறுவனம் பங்கு சந்தைக்கு அளித்துள்ள அறிக்கையில் டிவிடெண்ட் ஆனது, ஒரு பங்குக்கு 3 ரூபாய் என அறிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 31, 2022ம் நிதியாண்டிற்கான டிவிடெண்டாக 300% அதிகரித்துள்ளது.
பிரச்சனைகள்
எனினும் நிபுணர்கள் 3 முக்கிய சவால்களையும் சுட்டிக் காட்டியுள்ளது.
1 திட்டங்களை செயல்படுத்துவதில் தாமதம்.
2. மூலப்பொருட்கள் விலை அதிகரித்து வருவதால் இது மார்ஜின் விகிதத்தினை பாதிக்கலாம்.
3. QIP ஃபண்டுகளை பயன்படுத்துவதில் தாமதம்.
நிறுவனம் பற்றி
இந்த கெமிக்கல் நிறுவனம் 1946ம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இது விவ்சாய துறைக்கு தேவையான கெமிக்கல்களை உற்பத்தி செய்யும் ஒரு முன்னணி நிறுவனமாகும். இதன் சந்தை மூலதனம் 39,687 கோடி ரூபாயாகும். இந்த நிறுவனம் இது உள்நாட்டு மற்றும் ஏற்றுமதியில் தனது இருப்பினைக் கொண்டுள்ளது. இது குஜராத்தில் அதி நவீன வசதிகளைக் கொண்டுள்ளது.
sharekhan suggests buy this Chemical stock with Rs.3300 target price
sharekhan suggests buy this Chemical stock with Rs.3300 target price Sharekhan has set a target price of Rs 3,300 per share, saying PI Industries Ltd may raise its share price.