கோயிலில் பரதம் ஆடிய நீபா
சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் சிறிது காலம் நடிப்பில் கலக்கியவர் நீபா. நடிகை என்பதை விட டான்ஸராக தான் தமிழ் ரசிகர்களுக்கு அதிகம் பரிட்சயமானவர். சில படங்களில் நடன இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார். கடந்த 2013 ஆம் ஆண்டு வேலூரை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு தற்போது இரண்டு குழந்தைகள் உள்ளனர். திருமணத்திற்கு பின் ஆன் ஸ்கிரீனில் பெரிதாக தலைக்காட்டாத நீபா, தற்போது தான் கலர்ஸ் தமிழின் 'எங்க வீட்டு மீனாட்சி' மற்றும் 'அபி டெய்லர்' ஆகிய தொடர்களில் நடித்து வருகிறார். நடிப்பில் கம்பேக் கொடுத்தது போலவே சோஷியல் மீடியாவிலும் கம்பேக் கொடுத்துள்ள நீபா அடிக்கடி நடனமாடி ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார். அந்த வகையில் தற்போது ஒரு கோயிலில் பரத நாட்டியம் ஆடிய நடன அசைவுகளை செய்து காட்டி ரீல்ஸ் வெளியிட்டுள்ளார். இரண்டு குழந்தைகளுக்கு தாயான பின்னரும் நடனத்தில் அவருக்கு இருக்கும் ஆர்வம் மற்றும் திறமையை ரசிகர்கள் வியந்து பாராட்டி வருகின்றனர்.