கோவைக்கு வருகை தந்த ஒசூர் சங்கராபீடம் சவுபர்நிக்கா சங்கர விஜயேந்திரபுரி கார் மீது மர்ம பொருள் வீசிய நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
கோவை க.க.சாவடி பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மடத்திற்கு அவர் வருகை தந்த போது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
அவர் தங்கி இருந்த வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்ட கார் மீது வீசப்பட்ட மர்ம பொருளை கைப்பற்றிய வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் க.க.சாவடி போலீசார் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.