சென்னை ராயபுரத்தில் பல்லி விழுந்த சுண்டலை சாப்பிட்ட தாய் மற்றும் இரு மகள்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
எர்ணாவூர் பாரதியார் நகரைச் சேர்ந்த ஆரோக்கியராஜ்,மனைவி வேளாங்கண்ணி மற்றும் மகள்களான , டெய்சி, மரியா நான்சி ஆகியோர் நேற்று குடும்பத்துடன் ராயபுரம் எம்சி சாலையில் உள்ள தேனீர் கடையில் சுண்டல் சாப்பிட்டுள்ளனர்.
அப்போது மரியா நான்சி சாப்பிட்ட சுண்டல் கிண்ணத்தில் இறந்து போன பல்லி இருந்ததை அடுத்து 3 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.