ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 31 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வந்த பேரறிவாளனை உச்ச நீதிமன்றம் நேற்று முன் தினம் விடுதலை செய்து உத்தரவிட்டது. இதையடுத்து தனது விடுதலைக்காக போராடிய அனைவரையும் வாய்ப்பு கிடைக்கும்போது நேரில் சந்தித்து நன்றி தெரிவிக்க உள்ளதாக பேரறிவாளன் தெரிவித்திருந்தார்.
இதையடுத்துm முதலமைச்சர் மு க ஸ்டாலின்m அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிm மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்டோர் நேரில் சந்தித்து பேரறிவாளன் நன்றி தெரிவித்தார்.
அன்புக்குரிய திரு.பேரறிவாளன் அவர்களையும் அவரது அற்புதத் தாய் திருமதி.அற்புதம்மாள் அவர்களையும் அன்போடு வரவேற்றேன். பேரறிவாளன் விடுதலையில் நம்முடைய புரட்சித்தலைவி அம்மா அவர்கள் காட்டிய அக்கறை, 1/2 #PerarivalanRelease pic.twitter.com/17GjC4voTL
— TTV Dhinakaran (@TTVDhinakaran) May 19, 2022
இந்நிலையில், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை சந்தித்து பேரறிவாளன் மற்றும் அற்புதம்மாள் இருவரும் நன்றி தெரிவித்தனர். இதுகுறித்து டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில், அன்புக்குரிய திரு.பேரறிவாளன் அவர்களையும் அவரது அற்புதத் தாய் திருமதி.அற்புதம்மாள் அவர்களையும் அன்போடு வரவேற்றேன். பேரறிவாளன் விடுதலையில் நம்முடைய புரட்சித்தலைவி அம்மா அவர்கள் காட்டிய அக்கறை, அதற்காக எடுத்திட்ட முயற்சிகள் ஆகியவற்றிலிருந்து, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் உறுதியான ஆதரவு வரை அத்தனையையும் அவர்கள் நினைவு கூர்ந்தார்கள். சிறையால் சிதைந்த பேரறிவாளன் வாழ்க்கை மீண்டும் துளிர்த்திட வாஞ்சையோடு வாழ்த்தினேன் என பதிவிட்டுள்ளார்.