ஜெய்ப்பூர்:
ராஜஸ்தானின் கோட்டா பகுதியில் திருமண விழாவில் இரு தரப்பினரிடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சமாதானம் செய்ய முயன்றுள்ளனர். அப்போது குடிபோதையில் இருந்த விருந்தினர்கள் சிலர் போலீசார் மீது கற்களை வீசி தாக்கியுள்ளனர்.
இந்த சம்பவத்தில் ஒரு சப்- இன்ஸ்பெக்டர் மற்றும் இரண்டு கான்ஸ்டபிள்கள் என மூன்று பேர் காயம் அடைந்துள்ளனர். இதுதொடர்பாக இரண்டு பெண்கள் உட்பட பத்து பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், 8 பேர் பிடிபட்டிருப்பதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.