கொழும்பு: பல மாதங்களாக பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்த இலங்கை அரசு திவால் நிலையை அறிவித்தது. இலங்கை அரசு திவாலாகிவிட்டதாக அந்நாட்டின் மத்திய வங்கி ஆளுநர் அறிவித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக சமையல் எரிவாயு, எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை பன்மடங்கு அதிகரித்துள்ளது.
இதனால், மக்களின் கோபம் அரசுக்கு எதிரான போராட்டங்களாக எதிரொலித்த நிலையில், வேறு வழியில்லாமல், பிரதமர் மகிந்த ராஜபக்சே பதவி விலகினார். புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்கே பொறுப்பேற்றாலும், நிலைமையில் மாற்றம் ஒன்றும் ஏற்படவில்லை.
இலங்கையின் அதிபர் கோட்டாபய ராஜபக்ச உடனே பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி மக்கள் தொடர் போராட்டங்களை மேற்கொண்டுள்ளனர்.
மேலும் படிக்க | இலங்கை: புதிதாக 9 அமைச்சர்கள் பதவி பிரமாணம் செய்துகொண்டனர்
இந்த நிலையில், பல மாதங்களாக பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டிருந்த இலங்கை அரசு, திவாலாகிவிட்டதாக அந்நாட்டின் மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீர சிங்க அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார் என்பது கவலைகளை அதிகரிக்கிறது.
பல்வேறு கடன் நிலுவைகளையும், வட்டியையும் பணத்தையும் திருப்பி செலுத்த முடியவில்லை என்றும் கடந்த மாதம் 18ம் தேதி கடனாளர்களுக்கு செலுத்த வேண்டிய 78 மில்லியன் டாலர் பணத்திற்காக வழங்கப்பட்டிருந்த ஒரு மாத கூடுதல் அவகாசமும் முடிந்துவிட்டது.
இந்த நிலையில், கடனை திருப்பி செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்து இருப்பதாக தகவல்கள் வருகின்றன.
மேலும் படிக்க | WISE: இங்கிலாந்தில் இருந்து இந்தியாவிற்கு பணம் அனுப்பும் மலிவான வழிமுறை
மேலும், பணவீக்கம் 30%ல் இருந்து 40%ஆக அதிகரிக்கும் என்றும் இலங்கையின் மத்திய வங்கி ஆளுநர் கூறியுள்ளார். எரிபொருள் இறக்குமதி செய்வதற்கு தேவையான அந்நிய செலவாணி கையிருப்பு இல்லாததால் எரிபொருட்களை ஏற்றி வந்த கப்பல்கள் நடுக்கடலில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் மக்களின் அன்றாட தேவைகளுக்கான பொருட்களின் விலை மட்டும், தட்டுப்பாட்டின் காரணமாக உயர்ந்துக் கொண்டே செல்லும் நிலையில் ஒரு கிலோ கோதுமை மாவின் விலை 250 ரூபாய்க்கும் அதிகமாக விற்கிறது என்று மக்கள் கவலையுடன் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், இலங்கை அதிபரின் அதிகாரத்தை குறைக்கும் வகை அரசியல் அமைப்பில் திருத்தம் தேவை என பல தரப்புகளில் இருந்து தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில், 21 ஆவது அரசியல் அமைப்பு திருத்தம் தொடர்பாக, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, நேற்று சட்டத்துறை அமைச்சர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான விஜயதாச ராஜபக்ஷ மற்றும் சுசில் பிரேமஜயந்த ஆகியோருடன் கலந்துரையாடினார்.
இந்நிலையில், அரசிய சாஸன திருத்தம் தொடர்பான சட்ட வரைவு அடுத்த வாரம் அமைச்சரவையில் சமர்பிக்கப்படும் என கூறப்பட்ட நிலையில், தற்போது இலங்கையில் திவால் நிலை அறிவித்துள்ளது அரசியல் மாற்றங்கள் விரைவில் ஏற்படும் என்பதை சூசகமாக சுட்டிக் காட்டுகிறது.
மேலும் படிக்க | ஆஸ்திரேலியாவுக்கு தப்பி செல்ல முயன்ற 21 இலங்கையர்கள் கைது!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link – https://bit.ly/3hDyh4G
Apple Link – https://apple.co/3loQYeR