மிருகக்காட்சி சாலை ஒன்றில் ஆழ்ந்து உறங்கி கொண்டிருக்கும் பாண்டா கரடியை ஊழியர் ஒருவர் எழுப்பி கேரட்டை உணவாக கொடுக்கும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த பாண்டா கரடி சொகுசாக மரத்தால் ஆன பலகையில் சாப்பிட மறந்த நிலையில் படுத்து தூங்குகிறது. இதனை அடுத்து அங்கிருக்கும் பெண் ஊழியர் ஒருவர் அந்த பாண்டாவை கேரட்டால் எழுப்பி அதனை உணவாக கொடுக்கிறார்.
அந்த பாண்டாவும் சமர்த்தாக தூக்க கலக்கத்திலேயே கேரட்டை வாங்கி சாப்பிடுகிறது. பொதுவாக பாண்டா கரடிகள் சோம்பேறி குணம் கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது.