நெல்லையில், 3 பேரின் உயிரை பறித்த கல்குவாரி விபத்தில் போலீசாரால் தேடப்பட்டு வரும் கல்குவாரி உரிமையாளரின் வீட்டில் மர்ம நபர்கள் மிளகாய் பொடியை தூவிவிட்டுச் சென்றது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
தலைமறைவாகியுள்ள கல்குவாரி உரிமையாளர் செல்வராஜ் மற்றும் அவரது மகன் வீடுகளில் போலீசார் நேற்று சோதனை நடத்தினர். இதற்கு செல்வராஜின் ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், 2ம் நாளாக இன்றும் சோதனையிட போலீசார் திட்டமிட்டிருந்தனர்.
இந்நிலையில், செல்வராஜ் வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் வழிநெடுகிலும் மிளகாய் பொடியை தூவிட்டு சென்றதாக உறவினர்கள் புகாரளித்துள்ளனர். அங்கு 2 போலீசார் காவலுக்கு இருந்த நிலையில், வீட்டில் கொள்ளை நடந்ததா? அல்லது முக்கிய ஆவணங்களை மர்ம நபர்கள் எடுத்துச் சென்றார்களா என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.