பிரான்ஸ் பாரிஸ் நகரில் நடைபெற்ற ‘லெஸ் செண்சுரீஸ் குத்துச்சண்டை சுற்றுப்போட்டி பாரிஸ்-2022’ இல் இலங்கை தங்கப் பதக்கத்தை வென்றுள்ளது.
57 கிலோ எடைப் பிரிவில் போட்டியிட்ட இலங்கை இராணுவ குத்துச்சண்டை வீரர் லான்ஸ் கோப்ரல் பி.ஏ.ஆர் பிரசன்ன, வெற்றிபெற்று தங்கப்பதக்கத்தை சுவீகரித்துக்கொண்டார்.
இராணுவ ஊடக வட்டாரங்களின்படி, 24 விஜயபாகு காலாட்படை படைப்பிரிவை சேர்ந்த லான்ஸ் கோப்ரல் பிரசன்ன இப்போட்டியில் பங்கேற்ற இலங்கை தேசிய அணியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி வெற்றிபெற்ற ஒரே வீரர் ஆவார். மேட்படி போட்டிகள் இம்மாதம் (மே) 12 முதல் 15 திகதி வரை பிரான்ஸ், பாரிஸ் நகரில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.