பாலியல் தொழிலாளர்களுக்கும் ஆதார் அட்டை வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாலியல் தொழிலாளர்களின் நலன் கருதி தாக்கல் செய்யப்பட்ட மனு மீது 3 பேர் கொண்ட அமர்வு விசாரணை மேற்கொண்டது. அப்போது பேசிய நீதிபதிகள், நாட்டில் உள்ள அனைத்து மக்களும் கண்ணியமாக நடத்தப்பட வேண்டும் என்று அரசியல்சாசன சட்டத்தில் கூறப்பட்டுள்ளதை நினைவில் கொள்ள வேண்டும் என்றனர்.
மாநில, யூனியன் பிரதேச அரசுகள் உரிய அடையாள அட்டை இல்லாத பாலியல் தொழிலாளர்களைக் கண்டறிந்து, அவர்களுக்கு அடையாள அட்டையுடன் ரேஷன் பொருள்களும் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் வாக்காளர் அட்டையும் அவர்களுக்கு அளிக்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டனர்.