ரஷ்யாவிலிருந்து எரிவாயு இறக்குமதி செய்யும் நாடுகள், புடினின் ரஷ்ய நாணய பரிவத்தனையை ஏற்றதால், யுரோவுக்கு எதிரான ரஷ்ய ரூபிள் மதிப்பு 7 வருடங்கள் இல்லாத அளவிற்கு உயர்ந்துள்ளது.
உக்ரைன் – எதிராக ரஷ்யா போர் தொடுத்து வருவதால் அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் ரஷ்யா மீது தொடர்ந்து பொருளாதாரத் தடை விதித்து வருகிறன. எனவே கடந்த சில வாரங்களாக ரஷ்யாவின் ரூபிள் நாணய மதிப்பு பெரும் அளவில் சரிந்து இருந்தது.
ரூபிள் பரிமாற்றம்
ரூபிள் நாணய மதிப்பு சரிவை மீட்க நினைத்த ரஷ்ய அதிபர் விலாமிடர் புடின், ரஷ்யாவிலிருந்து எரிவாயு வாங்கும் நிறுவனங்கள் ரூபிள் பரிவர்த்தனையில் தான் பணம் செலுத்த வேண்டும் என கோரிக்கை வைத்தது. அதனை ஏற்ற பல ஐரோப்பிய நாடுகள் மற்றும் நிறுவனங்கள் ரூபிளில் பணம் பரிவத்தனை செய்ய தொடங்கின.
யூரோ, டாலர் மதிப்பு
எனவே வெள்ளிக்கிழமை யூரோவுக்கு நிகரான ரஷ்ய ரூபிள் மதிப்பு 9 சதவீதம் அதிகரித்துள்ளது. டாலருக்கு நிகரான ரஷ்ய நாணய மதிப்பு 5 சதவீதம் அதிகரித்து 61.63 ஆக உள்ளது. இந்திய ரூபாய்க்கு நிகரான ரஷ்ய ரூபிள் மதிப்பு 0.79 ஆக உள்ளது.
உலக நாடுகளின் நாணயங்களுக்கு நிகரான யுரோவின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வரும் நிலையில் இதுவும் பாதிப்பாக இப்போது அமைந்துள்ளது. 2015-ம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக ரஷ்ய ரூபிள் மதிப்பு இந்த அளவுக்கு உயர்ந்துள்ளது.
மேலும் உயர வாய்ப்பு
ரஷ்ய எரிவாயு மற்றூம் கச்சா எண்ணெய்யை ஐரோப்பியா உள்ளிட்ட பலவேறு நாடுகள் விரும்பும் போது டாலர் மற்றும் யூரோவின் மதிப்பு மேலும் சரிய அதிக வாய்ப்புள்ளது.
புடின் திட்டம் வெற்றி
சர்வதேச சந்தையில் எரிவாயு மற்றும் கச்சா எண்ணெய் விலை வரலாறு காணாத அளவு உயர்ந்து வருகிறது. அதை சரியாகப் பயன்படுத்திக்கொள்ள நினைத்த ரஷ்ய அதிபர் விலாமிடிர் புடின், குறைந்த விலையில் வழங்கி நாட்டின் பொருளாதாரத்துக்குச் சிக்கல் ஏற்படுத்தாத வகையில் பார்த்துக்கொள்ள முடிவு செய்தார். இப்போது அவரது இந்த முடிவு நல்ல பயனையும் அவருக்கு அளித்துள்ளது.
ரஷ்ய மத்திய வங்கி
எரிவாயு மற்றும் கச்சா எண்ணெய் மட்டுமல்லாமல் ரஷ்ய நிறுவனங்களின் அணைத்து பரிவர்த்தனையையும் ரூபிள் வழியாகச் செய்ய ரஷ்ய மத்திய வங்கி உத்தரவிட்டுள்ளது. மேலும் வெளிநாடுகளுக்குப் பணத்தை அனுப்பவும் பல கட்டுப்பாடுகளை ரஷ்யா விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Russian Ruble Surges to 7-Year High as Gas Buyers Bend to Putin’s Will
Russian Ruble Surges to 7-Year High as Gas Buyers Bend to Putin’s Will | புடின் விருப்பத்துக்கு வளைந்து கொடுத்த நாடுகள்.. ரஷ்ய ரூபிள் மதிப்பு 7 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு உயர்வு!