போலி மருத்துவர் அளித்த சிகிச்சைக்கு பின் சிறுமி உயிரிழப்பு – விசாரணையில் வெளியான தகவல்

வேப்பூர் மருந்தகத்தில் சிகிச்சை பெற்ற குழந்தை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த பூலாம்பாடி கிராமத்தை சேர்ந்த கார்த்திக்கின் 5 வயது பெண் குழந்தை லட்சிதா. கடந்த 7ம் தேதி காய்ச்சல் சளி காரணமாக குழந்தையைப் பெற்றோர் வேப்பூரில் உள்ள தனியார் மருந்தகத்தில் (மெடிக்கல் ஷாப்) சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அங்கு மருத்துவர் சத்தியசீலன் குழந்தைக்கு ஊசி போட்டு சிகிச்சை அளித்துள்ளார். குழந்தையை அவரது பெற்றோர்கள் வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளனர். பின்னர் உடல்நிலை மோசமாகவே வேப்பூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். குழந்தை லட்சிதா உயிரிழந்தது தெரியவந்தது.
வேப்பூர் காவல்துறையினர் குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். குழந்தையின் இறப்புக்கு காரணமாக மருத்துவக் குழுவினர் வேப்பூர் தனியார் மருந்தகத்தில் குழந்தை லட்சிதாவுக்கு சிகிச்சை அளித்த சத்தியசீலன் முறையாக படித்து தேர்ச்சி பெற்று மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்த மருத்துவரா எனவும் குழந்தைக்கு தவறான சிகிச்சை ஏதேனும் அளித்துள்ளாரா என்பது குறித்து விசாரிக்க சென்றுள்ளனர்.
image
அப்போது சத்தியசீலனின் பதிவெண் சான்றிதழ்களை அரசு மருத்துவர் தமிழரசன் கேட்டுள்ளார். மாறாக, சத்தியசீலன் கொடுக்க மறுத்து விசாரணைக்கு பயந்து ஓடிவிட்டார். அதன் அடிப்படையில், நல்லூர் வட்டார அரசு தலைமை மருத்துவர் தமிழரசன் வேப்பூர் காவல் நிலையத்தில் அளித்த புகார் அளித்தார். அவரை வேப்பூர் காவல்துறையினர் தேடி வரும் நிலையில் போலி மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி 19.5.22 குழந்தையின் தந்தை புகாரளித்தார்.
மருத்துவத் துறை மற்றும் காவல்துறையினரின் விசாரணையில் சத்தியசீலன் சான்றிதழில் உள்ளவர் திருச்சியை சொந்த ஊராக கொண்டவராகவும் பிரான்ஸ் நாட்டில் பணி ஆற்றுவதாகவும் கூறப்படுகிறது . அவரது சான்றிதழை பயன்படுத்தி மோசடி செய்து வருவதாகவும் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்தது.
கடலூர் மாவட்ட மருத்துவத்துறை இணை இயக்குனர் ரமேஷ் பாபுவிடம் தொடர்பு கொண்டபோது, வேப்பூரில் சத்தியசீலன் என்பவர் மருத்துவ தொழில் பார்த்து வந்ததாகவும் அவர் வைத்திருந்த சான்றிதழை பரிசோதனை செய்ததில் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரியில் பயின்றதாகத் தெரிவிக்கிறது. சான்றிதழில் உள்ளவர் தற்போது வெளிநாட்டில் வேலை பார்த்து வருவதாகவும் இது குறித்து சுகாதாரத் துறையின் சார்பில் வேப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதாகவும், மருத்துவத்துறையில் சார்பில் விசாரணை செய்து வருவதாக தெரிவித்தார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.