மணி, மதுரை
தமிழ்நாடு அரசு மதுரையில் கட்டி வரும் கலைஞர் நூலகத்தின் கட்டுமானப் பணிகள் 90% நிறைவடைந்து விட்டது என்றும் ஜூன் இறுதியில் திறக்கப்படும் என்று அமைச்சர் எ.வ.வேலு வியாழக்கிழமை கூறினார்.
பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் ஏ. வ.வேலு,
வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி ஆகியோர் மதுரையில் கட்டி வரும் முத்தமிழ் அறிஞர் கலைஞர் நினைவு நூலகம் கட்டுமான பணிகள் ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அமைச்சர் எ.வ. வேலு செய்தியாளர்களிடம் கூறியதாவது: முதல்வர் மு.க. ஸ்டாலின் கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் கலைஞர் நூலக கட்டிடப்பணியினை ஆய்வு மேற்கொண்டேன். இதற்கு என
ஐஏஎஸ் அதிகாரி மற்றும் தரக்கட்டுப்பாட்டு அதிகாரி போடப்பட்டு அவர்களின் மேற்பார்வையில் இந்த கட்டிட வேலை நடைபெற்று வருகிறது.
இந்த கட்டிட பணி ஜூன் மாதத்திற்குள் முடிவடைந்து விடும். தற்போது 90% கட்டிட பணி முடிந்துள்ளது. அடுத்து இன்டீரியர் வேலை நடை பெற வேண்டும். ஜூன் இறுதியில் திறக்கப்படும்.
கலைஞர் நூலகம் என்பதால் விரைந்து பணிகள் நடைபெறுவதாக கூறும் குற்றச்சாட்டு. முற்றிலும் உண்மையல்ல.
மதுரையில் ஸ்மார்ட் (ஸ்மால்) திட்டம் பணிகள் விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொண்டுள்ளோம்.
கோரிப்பாளையம் பகுதியில் உள்ள பாலத்திற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. டெண்டர் விடும் பணிதான் நடைபெற வேண்டி உள்ளது.
மேலும், நெல்பேட்டை முதல் அவனியாபுரம் வரை தடையின்றி செல்ல பாலம் கட்டும் பணிக்கு திட்ட மதிப்பீடு செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது” என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“