மணி, மதுரை
மதுரை மாவட்டம், மேலூரில் உள்ள கணேஷ் காம்ளைக்ஸ் திரையரங்கில், திமுக இளைஞரணி செயலாளரும், திருவல்லிகேணி – சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.வுமான உதயநிதி ஸ்டாலின் நடித்த நெஞ்சுக்கு நீதி திரைப்படம் திரையிடப்பட்டுள்ள நிலையில், அதனை தமிழக வணிகவரி மற்றும் பத்திரபதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார்.
முன்னதாக படம் திரையிடப்படுவதயொட்டி, திரையரங்கு முன்பு உதயநிதி ஸ்டாலின் ரசிகர் மன்ற நிர்வாகியும், மேலூர் நகர்மன்ற உறுப்பினருமான ரிஷி தலைமையில் ஏராளமான ரசிகர்கள், மற்றும் திமுகவினர் மேள தாளத்துடன் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து திரைப்படத்திற்கான டிக்கெட் மற்றும் இணைப்புகளை ரசிகர்களுக்கு வழங்கிய வணிகவரித்துறை மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி திமுக நிர்வாகிகளுடன் திரையரங்கில் அமர்ந்து படம் பார்த்து ரசித்தார்.
இந்த திரைப்படம் குறித்து ரசிகர்கள் கூறுகையில், “வித்தியாசமான மாற்று திறைக்களத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்திருப்பதாகவும், இதுபோன்று திரைத்துறையிலும், அரசியலிலும் தொடர்ந்து பயணிக்க வேண்டும்” என்று தெரிவித்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“