மத்திய அரசு பல்கலைக்கழகங்களுக்கான CUET – PG தேர்வை ஏற்க இரண்டு பல்கலைக்கழகங்கள் மறுத்துள்ள நிலையில், அத்தேர்வு கட்டாயமல்ல என யூஜிசி விளக்கமளித்துள்ளது.
தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு நேற்று தொடங்கிய நிலையில், மத்திய பல்கலைக்கழகங்கள் பட்டியலில் வரும் ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகம், அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம் ஆகியவை அத்தேர்வின் படி சேர்க்கை நடைபெறாது என்று அறிவித்தது.
இந்நிலையில், மத்திய பல்கலைக்கழகங்கள் விரும்பினால் CUET தேர்வின் படி மாணவர் சேர்க்கை நடத்தலாம் என்றும், இல்லையெனில் தனி நுழைவுத்தேர்வு நடத்தியும் சேர்க்கையை நடத்தலாம் என்றும் யூஜிசி விளக்கம் அளித்துள்ளது.