மும்பை : நடு வானில் பறந்து கொண்டிருந்த போது, ‘இன்ஜின்’ செயலிழந்ததால், ‘ஏர் இந்தியா’ விமானம் மும்பை விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
மஹாராஷ்டிராவின் மும்பையில் இருந்து, கர்நாடகாவின் பெங்களூருக்கு நேற்று காலை, ஏர் இந்தியா நிறுவனத்தின் பயணியர் விமானம் கிளம்பியது. கிளம்பிய 27 நிமிடங்களில் நடு வானில் பறந்து கொண்டிருந்த போது, விமானத்தின் ஒரு இன்ஜினில் கோளாறு ஏற்பட்டு செயலிழந்தது.விமானி உடனடியாக விமானத்தை திருப்பி, மும்பை விமான நிலையத்திலேயே பத்திரமாக தரையிறக்கினார். இதையடுத்து, அதில் இருந்த பயணியர் மற்றொரு விமானத்தில் பெங்களூருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இது குறித்து, சிவில் விமான போக்குவரத்து துறை விசாரணை நடத்தி வருகிறது.
மும்பை : நடு வானில் பறந்து கொண்டிருந்த போது, ‘இன்ஜின்’ செயலிழந்ததால், ‘ஏர் இந்தியா’ விமானம் மும்பை விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.மஹாராஷ்டிராவின் மும்பையில்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.