சென்னை : மெரினா கடற்கரையில் காந்தியை சிலையை மையப்படுத்தி குடியரசு தின அணி வகுப்பு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும். மேலும் கடற்கரையின் அடையாளமாக காந்தி சிலை உள்ளது.
மெட்ரோ ரயில் பணிகளால், காந்தி சிலை சேதமடைவதைத் தடுக்க, தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க முடிவு செய்தது. அதன்படி, மெரினா காந்தி சிலையை இடமாற்றம் செய்ய தமிழக அரசு முடிவு செய்தது.
ரிப்பன் மாளிகையில் சிலையை இடமாற்றி வைக்க முதலில் மாநகராட்சி முடிவு செய்தது. பின்னர், இந்த முடிவை மாற்றி, கடற்கரையிலேயே வேறு இடத்தில் சிலையை வைக்க தற்போது முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதனை மேற்கொள்ள சென்னை மாநகராட்சி தடையில்லா சான்று வழங்கியுள்ளது. சிலையை இடமாற்றும் பணியை பொதுப்பணித்துறை மேற்கொள்ள உள்ளது.
இதற்காக இடம் கண்டறிய ஆய்வு நடத்தப்பட்டு வருவதாகவும், மெரினா கடற்கரை ஒட்டியுள்ள சர்வீஸ் சாலையிலேயே ஓர் இடம் கண்டறிந்து அங்கு சிலையை வைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.