வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: கடந்த சில நாட்களாக மொழியை வைத்து சர்ச்சைகளை கிளப்பும் முயற்சிகள் நடப்பதை பார்க்கிறோம் என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
ராஜஸ்தானில் நடக்கும் பா.ஜ., நிர்வாகிகள் கூட்டத்தில் வீடியோ கான்பரன்சிங் வாயிலாக மோடி பேசியதாவது: ஜனசங்கம் இருந்த போது, நம்மை பற்றி பலருக்கு தெரியாது. தேசத்தை கட்டமைக்கும் கொள்கையை நமது தொண்டர்கள் ஏற்று கொண்டனர். அதிகாரத்தில் இருந்து நாம் நீண்ட தொலைவில் இருந்தாலும், நமது தொண்டர்கள் தேசப்பற்று மிக்கவர்களாக இருந்தனர். முக்கியமான மற்றும் குறிப்பிடத்தக்க பிரச்னைகளில் இருந்து நாட்டின் கவனத்தை திசை திருப்பும் வகையிலான சுற்றுச்சூழலை முற்றிலும் ஆராய்ந்து கொண்டிருக்கும் கட்சிகள் இருப்பதை நாம் பார்க்கிறோம். அவர்களிடம் இருந்து நாம் கவனமாக இருக்க வேண்டும்.
கடந்த சில நாட்களாக மொழியை வைத்து சர்ச்சைகளை கிளப்பும் முயற்சிகள் நடப்பதை பார்க்கிறோம். ஒவ்வொரு பிராந்திய மொழிகளையும் இந்திய கலாசாரத்தின் பிரதிபலிப்பாகவும், வணங்குவதற்கு மதிப்புள்ளதாக பா.ஜ., கருதுகிறது. புதிய தேசிய கொள்கையில், அனைத்து பிராந்திய மொழிகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. மொழிகளை, நாட்டின் சிறந்த எதிர்காலத்திற்கான இணைப்பாக பா.ஜ., கருதுகிறது. சுதந்திரம் அடைந்த பிறகு, குடும்ப கட்சிகள் ஊழல், மோசடி என நாட்டின் மதிப்பு மிக்க நேரத்தை வீணடித்துள்ளன. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
Advertisement