ரணிலின் வருகையால் ஏற்படவுள்ள மாற்றம் – அமெரிக்கா வெளியிட்ட தகவல்


இலங்கையின் அண்மைய அரசியல் மாற்றங்களுடன் தற்போது நிலவும் அரசியல் நெருக்கடிகள் குறைவடைந்து பத்திரங்களின் பெறுமதி உயரும் என அமெரிக்காவின் முன்னணி முதலீட்டு வங்கிகளில் ஒன்றான ஜே.பி.மோர்கன் தெரிவித்துள்ளது.

அரசியல் ஸ்திரத்தன்மை தற்போதைய குறைந்த மதிப்பை விட பத்திரங்களின் மதிப்பு உயர வழிவகுக்கும் என வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.

ரணிலின் வருகையால் ஏற்படவுள்ள மாற்றம் - அமெரிக்கா வெளியிட்ட தகவல்

இது சர்வதேச நாணய நிதியத்துடனான கலந்துரையாடல் மற்றும் சட்ட மற்றும் நிதி ஆலோசகர்களை நியமிக்கும் செயல்முறையை எளிதாக்கும் என்று வங்கி கணித்துள்ளது.

இந்த ஸ்திரத்தன்மை சர்வதேச நாணய நிதியத்தின் விவாதங்கள் மற்றும் சட்ட மற்றும் நிதி ஆலோசகர்களை நியமனம் செய்யும் செயல்முறையை முன்னோக்கி நகர்த்துவதற்கு வழிவகுக்கும் என்று நாங்கள் நினைக்கிறோம், என ஜே.பி.மோர்கன் வங்கி ஆய்வாளர்களை அடிப்படையாக கொண்டு செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

அரசியல் ஸ்திரத்தன்மையானது, குறைந்த அளவிலிருந்து பத்திரங்கள் உயர வழி வகுக்கும் என ஜேபி மோர்கன் ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

ரணிலின் வருகையால் ஏற்படவுள்ள மாற்றம் - அமெரிக்கா வெளியிட்ட தகவல்

ஏற்கனவே சில கடன் பத்திர வட்டிக் கொடுப்பனவுகள் புதனன்று காலாவதியாகி விட்டது. சலுகை காலம் என அழைக்கப்படும் கால அவகாசம் இலங்கைக்கு உத்தியோகபூர்வமாக முடிவுக்கு வந்துள்ளது.

இதேவேளை, மீளச் செலுத்தப்பட வேண்டிய வெளிநாட்டுக் கடன்கள் தொடர்பிலான அறிக்கை அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.