ரஷ்யா – உக்ரைன் இடையிலான போர் காரணமாக, ரஷ்யாவில் உள்ள வெளிநாட்டு நிறுவனங்கள் ஒவ்வொன்றாக வெளியேறி வருகின்றன. இதனால் பல்வேறு நிறுவனங்கள் மூடப்பட்டு ரஷ்யர்கள் வேலையை இழக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
அண்மையில் ரஷ்யாவிலிருந்து ரெனால்ட் கார் நிறுவனம் வெளியேறியது. உடனே ரஷ்யாவின் ரெனால்ட் நிறுவனப் பங்குகளை 1 ரூபளுக்கு விலை பேசி, அரசு நிறுவனம் கைப்பற்றியது. அதற்கு சில நாட்களுக்கு முன்பு உணவு சங்கிலி நிறுவனமான மெக்டொனால்டும் ரஷ்யாவிலிருந்து வெளியேறுவதாக அறிவித்து இருந்தது.
மாருதி சுசூகி புதிய தொழிற்சாலை: 75% வேலைவாய்ப்பு ஹரியானா மக்களுக்கு மட்டுமே..!!
மெக்டொனால்டு
ரஷ்யாவில் 30 ஆண்டுகள் தங்களது உணவு கடைகளை நடத்தி வந்த மெக்டொனால்டு, உக்ரைன் நாட்டுக்கு ஆதரவு அளிக்கும் விதமாக அங்கு இருந்து வெளியேறுவதாகத் தெரிவித்தது.
847 உணவகங்கள்
மேலும் ரஷ்யாவில் உள்ள அனைத்து மெக்டொனால்டு உணவகங்களையும் விற்பனை செய்வதற்கான நடவடிக்கையினை தொடங்கியுள்ளதாகவும் தெரிவித்து இருந்தது. உலகின் மிக பெரிய உணவு சங்கிலி நிறுவனமான மேக்டொனால்டு, ரஷ்யாவில் 847 உணவகங்களைக் கொண்டுள்ளது. மேக் டொனால்டின் இந்த நடவடிக்கையினால் மாத மாதம் 50 மில்லியன் டாலர் இழப்பு ஏற்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது.
ஊழியர்களுக்குச் சம்பளம்
ரஷ்யாவிலிருந்து வெளியேறினாலும், அதன் ஒப்பந்தம் முடிவடையும் வரையில், 62,000 ஊழியர்களுக்கும் தொடர்ந்து ஊதியம் வழங்கப்படும் என மெக்டொனால்டு அறிவித்து இருந்தது.
விற்பனை
இந்நிலையில் ரஷ்யாவில் மெக்டொனால்டு உணவகத்தின் கூட்டாளியாக இருந்த அலெக்சாண்டர் கோவருக்கு அதன் மொத்த பங்குகளை விற்க உள்ளதாகத் தெரிவித்துள்ளது.
ரஷ்ய அரசு ஆதரவு
அதை சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற நினைக்கும் புடின் தலைமையிலான ரஷ்ய அரசு, மெக்டொனால்டு உணவகத்தை வாங்கும் நிறுவனத்துக்கு அரசு முழு ஆதரவையும் வழங்கும். அவர்கள் புதிய பெயரில் உணவகங்களை தொடரலாம் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
எனவே ரஷ்யாவில் மெக்டொனால்டு நிறுவனம் புதிய பெயரில் விரைவில் இயங்கத் தொடங்கும். ரஷ்ய அரசின் இந்த திட்டத்தால் 62,000 ஊழியர்களின் வேலைவாய்ப்பு பாதுகாக்கப்பட்டுள்ளது என்பது ஆறுதல் செய்தியாக உள்ளது.
McDonald’s Exit From Russia, Russian Government To Help
McDonald’s Exit From Russia, Russian Government To Help Buyer | ரஷ்யாவிலிருந்து வெளியேறும் வெளிநாட்டு நிறுவனங்கள்.. களத்தில் இறங்கிய புடின் அரசு!