ரஷ்யா நிலைகள் மீது உக்ரைன் ஹெலிகாப்டர்கள் ராக்கெட் மழை பொழிந்த காணொளிகள் வெளியாகியுள்ளது.
பிப்ரவரி மாத இறுதியிலிருந்து உக்ரைன் மீது படையெடுத்து வரும் ரஷ்யா, சமீபத்திய நாட்களாக போரில் பின்னடைவை சந்தித்துள்ளது.
எனினும், மரியுபோல், கெர்சன் நகரங்களை தொடர்ந்து தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது ரஷ்யா.
மே 20ம் திகதி நிலவரப்படி உக்ரைன் மீதான போரில் ரஷ்யா 28,700 ராணுவ வீரர்களை இழந்துள்ளது.
அதுமட்டுமின்றி, 204 போர் விமானங்கள், 1,263 டாங்கிகள், 168 ஹெலிகாப்டர்கள், 13 போர்க்கப்பல்கள், படகுகளை இழந்துள்ளது.
இந்நிலையில், ரஷ்யா நிலைகளில் மீது உக்ரைனின் MI-24 ரக ஹெிகாப்டர்கள் ராக்கெட்டுகள் ஏவி தாக்குதல் நடத்தியுள்ளன.
இதுதொடர்பாக வெளியான காணொளியில், உக்ரைனின் இரண்டு MI-24 ரக ஹெிகாப்டர்கள், நடுவானில் பறந்த படி ரஷ்ய நிலைகளை நோக்கி ராக்கெட்டுகளை ஏவுகின்றன.
இச்சம்பவம் எந்த இடத்தில் எப்போது நடந்தது என்ற விவரம் ஏதும் வெளியாகவில்லை.
Ukrainian Mi-24 helicopters firing rockets into the air towards Russian positions.https://t.co/1M3xRW1rwr pic.twitter.com/d0YJ3gi2Ia
— Rob Lee (@RALee85) May 20, 2022
உதயநிதி தான் அடுத்த முதல்வர்! அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் பரபரப்பு