உக்ரைனுடனான போரில் ரஷ்யா தோற்றுவிட்டது என்றும், புடினுடைய ஆட்சிக் கவிழ்க்கப்படுவது உறுதி என்றும் புடினுடைய மூத்த பாதுகாப்பு அதிகாரிகள் நம்புவதாக ரஷ்ய நிபுணர் ஒருவர் பரபரப்புத் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ரஷ்ய நிபுணரான Christo Grozev என்பவர், ரஷ்ய உளவு ஏஜன்சியாகிய GRU மற்றும் ரஷ்யப் பாதுகாப்பு ஏஜன்சியாகிய FSB ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த ரஷ்ய செல்வந்தர்கள், மேற்குடி மக்கள், மூத்த அதிகாரிகள் ஆகியோர்தான் புடினுடைய ஆட்சியைக் கவிழ்க்கப்போகிறவர்கள் என தான் நம்புவதாகவும், அதற்குக் காரணம், உண்மையில் உக்ரைனில் என்ன நடக்கிறது என்பது அவர்களுக்குத்தான் தெரியும் என்றும் கூறியுள்ளார்.
புடினுடைய ஆட்சி கவிழும் என்ற எதிர்பார்ப்பில், அந்த ரஷ்ய செல்வந்தர்கள், தங்கள் பணத்தையும் தங்கள் குடும்பத்தினரையும் பாதுகாப்பான இடத்துக்கு வெளியேற்றுவதற்கான வழிகளை ஏற்கனவே திட்டமிடத் துவங்கிவிட்டதாகவும் Grozev தெரிவித்துள்ளார்.
எது இந்த ஆட்சிக் கவிழ்ப்பைத் தூண்டும் என அவரிடம் கேட்டபோது, புடின் தனது தளபதிகளை அணு ஆயுத தாக்குதல் நடத்த உத்தரவிடும்போது, அல்லது உத்தரவிட்டால் அப்போது அவரது ஆட்சிக் கவிழ்க்கப்படும் என்கிறார் Grozev.
புடின் அணு ஆயுத தாக்குதல் நடத்த உத்தரவிட முடிவு செய்வாரானால், அதற்கு முன், தனக்குக் கீழ் உள்ள அனைவரும் தனது உத்தரவை நிறைவேற்றுவார்கள் என்பதை அவர் உறுதி செய்துகொள்ளவேண்டும் என்கிறார் Grozev.
அவருக்குக் கீழே உள்ளவர்களில் ஒரே ஒருவர் மட்டும் அவரது உத்தரவுக்குக் கீழ்ப்படியவில்லை என்றால்கூட, அப்போது அவரது உத்தரவு செல்லவில்லை, அதாவது அவருடைய உத்தரவுக்கு மதிப்பில்லாமல் போய்விட்டது என்ற சமிக்ஞை கொடுக்கப்பட்டுவிடும். அப்போது புடின் கொல்லப்படக்கூட வாய்ப்புள்ளது என்கிறார் Grozev.
இதுபோன்ற பயங்களால்தான் எந்த அதிரடி நவடடிக்கையையும் எடுக்க புடின் தயங்குகிறார் என்கிறார் Grozev.