ரூ.1100 கோடிக்கு ஏலம் போன கார்.. என்ன ஸ்பெஷல்!

நம்மில் பலர் வாட்ச், ஸ்டாம்ப், ரூபாய் நோட்டுகள், போன், பேனா, பைக் உள்ளிட்ட பொருட்களைச் சேகரிக்கும் நபர்களாக இருப்போம். இப்படி 1995-ம் ஆண்டு மெர்சண்டைஸ் பென்ஸ் தயாரித்த ஒரு அறிய வகை காரை 143 மில்லியன் டாலர் என இந்திய மதிப்பில் 1100 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் வாங்கியுள்ளார் ஒருவர்.

இதுதான் உலகின் இதுவே உலகின் மிக விலையுயர்ந்த கார் என்று கனடாவிலிருந்து இயங்கி வரும் ஏல நிறுவனமான ஆர்எம் சோத்பிஸ் தெரிவித்துள்ளது.

18 மாத சரிவில் இருந்து மீண்டும் வரும் ரூபாய்.. இனி எப்படியிருக்கும்?

அறிய வகை கார்

அறிய வகை கார்

மெர்சண்டைஸ் நிறுவனம் அவ்வப்போது அறிய வகை கார்களை தயாரித்து அதை தங்களது அருங்காட்சியகத்தில் வைத்து இருக்கும். அந்த கர்களை பெரும்பாலும் யாருக்கும் மெர்சண்டைஸ் யாருக்கும் விற்காது.

மெர்சண்டைஸ் பென்ஸ் 300 SLR Uhlenhaut Coupé கார்

மெர்சண்டைஸ் பென்ஸ் 300 SLR Uhlenhaut Coupé கார்

இந்நிலையில் 1995-ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட மெர்சண்டைஸ் பென்ஸ் 300 SLR Uhlenhaut Coupé கார் ஏலத்திற்கு வந்துள்ளது. அதை தனியார் கார் சேகரிப்பாளர் ஒருவர் 135,000,000 யூரோக்கல் கொடுத்து ஏலம் எடுத்துள்ளார். முன்னதாக இதுபோன்ற ஒரு கார் 95 மில்லியன் டாலருக்கு விற்கப்பட்டதே சாதனையாக இருந்தது.

ரகசிய ஏலம்
 

ரகசிய ஏலம்

ரகசியமாக ஜெர்மனியில் மெர்சண்டைஸ் பென்ஸ் நிறுவனத்துக்கு உள்ள அருங்காட்சியகத்தில் மே 5-ம் தேதி நடைபெற்ற இந்த ஏலத்தில் பிரிட்டிஷ் கார் சேகரிப்பாளரான சைமன் கிட்சன் பெரும் தொகைக்கு காரை வாங்கியுள்ளார் என மெர்சண்டைஸ் பென்ஸ் தலைவர் ஓலா கேல்லேனியஸ் உறுதிப்படுத்தியுள்ளார்.

மே 18-ம் தேதி பேட்டியளித்த மெர்சண்டைஸ் பென்ஸ் தலைவர் ஓலா கேல்லேனியஸ், மெர்சண்டைஸ் பிராண்ட் மதிப்பிற்கு இந்த ஏலம் ஒரு உதாரணம் என கூறியுள்ளார்.

அம்பு வடிவ கூபே கார்

அம்பு வடிவ கூபே கார்

மிகவும் அரிதான அம்பு வடிவ கூபே கார் இதுவரையில் இரண்டு மட்டுமே தயாரிக்கப்பட்டுள்ளது. அதில் ஒன்றை மெர்சண்டைஸ் நிறுவனம் இப்போது எலம் விட்டுள்ளது. மேலும் இது வரையில் இதுபோன்ற கார்களை தனிநபர் யாருக்கும் மெர்சண்டைஸ் நிறுவனம் விற்றதில்லை.

குறைந்த விலை தான்

குறைந்த விலை தான்

அந்த காருக்கு இந்த விலை 100 சதவீதம் பொருத்தமானது. இந்த விலை குறைவு என கூட சிலர் சொல்வார்கள் என அறிய வகை கார் விற்பனை முகவரான ஸ்டீபன் செரியோ தெரிவித்துள்ளார்.

மெர்சண்டைஸ் அதை விற்கும் என்று யாரும் நினைக்கவில்லை. இந்த காரை வாங்கிய நபர் குறித்த பெயர் வெளியாகி இருந்தாலும், மெர்சண்டைஸ் நிறுவனம் அது யார் என்ற விவரத்தை வெளியிடவில்லை.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

1955 Mercedes-Benz 300 SLR becomes world’s most expensive car to be sold at auction

1955 Mercedes-Benz 300 SLR becomes world’s most expensive car to be sold at auction | ரூ.1100 கோடிக்கு ஏலம் போன கார்.. என்ன ஸ்பெஷல்!

Story first published: Friday, May 20, 2022, 16:29 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.