லடாக் பாங்காங் டிசோ ஏரியில் பாலம் கட்டும் சீனா – இந்தியாவின் பதில் என்ன?

பாங்காங் டிசோ ஏரியில் சீனா இரண்டாவது பாலம் கட்டுவதை இந்தியா உன்னிப்பாக கவனித்து வருவதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள மத்திய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி, ” தற்போது சீனாவால் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதாகக் கூறப்படும்  இடம் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியாக கருதப்படுகிறது. இது ஒரு இராணுவப் பிரச்சினை, அதனால் இதன் தாக்கங்கள் பற்றி என்னால் விவாதிக்க முடியாது, இந்தப் பாலம் அல்லது இரண்டாவது பாலம் குறித்த செய்திகளைப் பார்த்தோம், இது குறித்த நிலைமையைக் கண்காணித்து வருகிறோம். இது தொடர்பாக சீனத் தரப்புடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்” என தெரிவித்தார்.
China building new bridge near Pangong Tso: Satellite imagery | India News  - Times of India

கிழக்கு லடாக்கில் உள்ள எல்லைப்பகுதியான பாங்காங் டிசோ ஏரியைச் சுற்றியுள்ள பகுதியில் சீனா இரண்டாவது பாலத்தை நிர்மாணித்து வருகிறது, இது சீன இராணுவத்திற்கு தனது படைகளை விரைவாக அணிதிரட்ட உதவும் என்று சொல்லப்படுகிறது.

இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக கிழக்கு லடாக்கில் உள்ள எல்லைப்பகுதியில் இந்தியா மற்றும் சீனாவுக்கு இடையே  பதட்டம் நீடித்து வரும் நிலையில் இந்த பாலம் கட்டப்பட்டு வருவது செயற்கைகோள் படங்கள் மூலமாக தெரியவந்துள்ளது.
image
இந்த விவகாரம் குறித்து டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, “சீனா முதல் பாலத்தை கட்டிய போது மத்திய அரசு சூழ்நிலையை கவனித்துக் கொண்டு இருக்கிறோம் என்று சொன்னது. சீனா இரண்டாவது பாலத்தை கட்டிய போதும் மத்திய அரசு சூழ்நிலையை கவனித்துக் கொண்டு இருக்கிறோம் என சொல்கிறது.

நாட்டின் பாது காப்பும் எல்லையின் பாதுகாப்பும் சமரசத்திற்கு அப்பாற்பட்டது. கோழைத்தனமும், பணிந்து போகுதலும் எதற்கும் உதவாது. பிரதமர் நாட்டைப் பாதுகாக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.