20.5.2022
04.00: பாகிஸ்தானைச் சேர்ந்த தொழிலதிபரான முகமது சஹூர், பிரிட்டனில் தொழிலதிபராக இருக்கிறார். பாகிஸ்தான் வம்சாவளி நபரான இவர் உக்ரைனில் வசித்துவந்தவர். உக்ரைன் போரில் சிக்கிக்கொண்ட பலரை பத்திரமாக வெளியேற்ற உதவியவர்.
உக்ரைன் பாடகியான கமாலியாவின் கணவர். இப்படிப் பல்வேறு விதங்களில் உக்ரைனுடன் நெருங்கிய உறவைக் கொண்டிருக்கும் முகமது சஹூர், சமீபத்தில் தனது நண்பர்களின் ஒத்துழைப்புடன் அந்நாட்டுக்கு இரண்டு போர் விமானங்கள் வாங்கி கொடுத்துள்ளார்.
00.20: பிரிக்ஸ் கூட்டமைப்பின் வெளியுறவுத் துறை மந்திரிகள் கூட்டம் காணொலி வாயிலாக நடைபெற்றது. பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளின் வெளியுறவுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய ரஷியாவின் வெளியுறவுத்துறை மந்திரி செர்கே லாவ்ரோவ், உக்ரைனில் நிலவும் சூழ்நிலையை எடுத்துரைத்தார். உக்ரைனில் ரஷியா ராணுவத்தின் செயல்பாடுகளை விளக்கிக் கூறினார்.