டாக்கா : கோதுமை ஏற்றிச் சென்ற சிறிய ரக சரக்கு கப்பல், வங்கதேசத்தின் மேக்னா ஆற்றில் மூழ்கியது. வங்கதேசத்தை சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று, இந்தியாவிலிருந்து கோதுமையை இறக்குமதி செய்து, அதை மாவாக்கி விற்பனை செய்து வருகிறது. இதற்காக, இந்தியாவிலிருந்து கோதுமையை ஏற்றிக் கொண்டு, வங்கதேசத்தக்கு சரக்கு கப்பல் ஒன்று சென்றது. சட்டோகிரம் துறைமுகத்தில் நின்ற அந்த கப்பலில் இருந்து 16 லட்சம் கிலோ கோதுமை, தனியார் நிறுவனத்தக்கு சொந்தமான சிறிய சரக்கு கப்பல் ஒன்றில் ஏற்றப்பட்டது. இந்தக் கப்பல், மேக்னா ஆற்றில் சென்று கொண்டிருந்த போது, இரும்பு பொருள் ஒன்றின் மீது மோதியதில் கவிழ்ந்து மூழ்கியது. இதில் கோதுமை முழுதுமாக நாசமடைந்தது.இது பற்றி வங்கதேச துறைமுக அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
டாக்கா : கோதுமை ஏற்றிச் சென்ற சிறிய ரக சரக்கு கப்பல், வங்கதேசத்தின் மேக்னா ஆற்றில் மூழ்கியது.வங்கதேசத்தை சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று, இந்தியாவிலிருந்து கோதுமையை இறக்குமதி செய்து,
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.