வார ராசிபலன்: 20.5.2022  முதல் 26.5.2022 வரை!  வேதா கோபாலன்

மேஷம்

கோயிலுக்குச் சென்று நேர்த்திக் கடனை செலுத்த ஹாப்பியா செலவு செய்து நிம்மதியடைவீங்க. சொத்து சம்பந்தமா அவசரப்பட்டு முடிவு எடுத்துட்டீங்கன்னா பல பிரச்னைகளை சந்திக்க வேண்டிவரும். ஸோ நல்லா திங்க் பண்ணி கேர்ஃபுல்லா முடிவு எடுத்து நிம்மதியா இருங்க. உத்தியோகத்தில் அதிகாரிங்களோட ஆதரவு கெடைக்கும். தொழில், பிசினஸ் தொடர்பான பயணங்கள் நிறைய உண்டு. சற்றும் எதிர்பாராத பண வரவு ஏற்ப்பட வாய்ப்புள்ளது. வீண் செலவுகள் படிப்படியாக குறையும். மனதில் ஏற்பட்ட குழப்பங்கள் நீங்கி நிம்மதியை பெற முடியும். லோன் தொந்தரவை ஓரளவு சமாளிச்சுடுவீங்க. டோன்ட் ஒர்ரி. நெருங்கிய ரிலேடிவ்ஸ்ஸோட ஹெல்ப் கெடைக்கும். எதிர்பாராத ஹாப்பி செலவுகள் வரும். மனதில் புது புது எண்ணங்கள் தோன்ற ஆரம்பிக்கும். கணவன் மனைவி ரெண்டு பேருமே மனம்விட்டு பேசுவது நல்லதுங்க.

ரிஷபம்

பண வரவுகள்/ இன்கம்/ பிராஃபிட் அதிக அலைச்சல் இல்லாமயே வந்து சேரும். ஹஸ்பெண்ட் ஒய்ஃப் இருவரும் விட்டு கொடுத்து சென்றால் வீண் பிரச்னைங்களை அவாய்ட் செய்யலாம். குடும்பத்தில் ஆடம்பர செலவுகள் அதிகம் இருக்கும். இட்ஸ் ஓகே. பழைய சொத்துக்கள் விற்றுப் புதிய வீடு வாங்க சான்ஸ் இருக்குங்க. எண்ணிய காரியங்கள் கைகூடும் சூழ்நிலை உண்டாகும். நிலுவையிலிருந்த பணம் கைக்கு வரும். உத்தியோகத்தில் பொறுமையைக் கடைப்பிடித்து வெற்றியடைவிங்க. தொழில், வியாபார தொடர்பான பேங்க் லோன் கிடைக்கும். உங்க கஷ்டங்களுக்கும் பிரச்னைகளுக்கும் நல்ல தீர்வு கெடைக்கும். லோன் பிரச்சினைக்கு ஒரு முற்றுப் புள்ளி வைச்சு ஹாப்பியாவீங்க. ஏற்கனவே வாங்கிய பழைய கடனை அடைக்க முடியும். குடும்பத்துடன் சந்தோஷமாகப் பொழுதை கழிக்க முடியும். ஃபேமிலியில் பொறுப்புகள் நாளுக்கு நாள் அதிகமாவது போல் உணருவீங்க.

மிதுனம்

குடும்ப விஷயங்களை யாரிடமும் பேசாமல் இருந்துடுங்க. ப்ளீஸ். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இட மாற்றம் ஏற்படும். தொழில், வியாபாரம் கொஞ்சம் டல்லா இருந்தா டோன்ட் ஒர்ரி. சீக்கிரம் பிக் அப் ஆயிடும். குடும்ப பிரச்சனைகளுக்கு ஒரு நல்ல தீர்வு கிடைக்கும். லோன் பிரச்சனை படி படியாக குறைய தொடங்கும். மேற்கொண்டு லோன் வாங்கும் சூழல் இருக்காது. குடும்ப வருமானம் சொல்லும்படி இருக்கும். செலவுகளை கட்டுப்படுத்த முடியும். உடல் நிலையை பொறுத்தவரை எந்த ஒரு தொந்தரவும் இருக்காது. உறவினர்களிடையே இருந்து வந்த டென்ஷனும் முறைப்பும் முடிவுக்கு வரும். நண்பர்கள் கிட்ட இருந்துக்கிட்டிருந்த பகைக்கு எண்ட் கார்ட் போடுவீங்க. பணியில் புது முயற்சிகளை மேற்கொள்வதற்கு முன் தகுந்த நபர்கள் கிட்ட அட்வைஸ் கேட்டுக்குங்க. தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த பணம் கைக்கு வரும்.

சந்திராஷ்டமம்: மேமாதம் 20 முதல் மேமாதம் 22  வரை

கடகம்

ஆன்மீகத்துல தனி ஈடுபாடு உண்டாகும். குடும்பத்துல ஆடம்பர செலவுகள் நெறைய ஏற்படும். ஹெல்த் சூப்பரா இருக்குங்க. புதுசாய் வாகனம் வாங்கும் லக் உண்டு. குடும்பத்துல தேவையில்லாத வீண் செலவு ஏற்படும். உடன்பிறப்புகளிடம் அன்பும் பாசமும் அதிகரிக்கும்படியான இன்ஸிடென்ட்ஸ் நடக்கும். மத்தவங்களுக்குக் குடுத்த வாக்கைக் காப்பாற்றுவதுல கொஞ்சம் லோசா சிரமம் இருக்கும். சில எதிர்பாராத பொருள் மற்றும் தொகை கெடைக்க லேசான சான்ஸ் இருக்கு. எதிர்பார்த்த லோன் கிடைக்கும். வழக்கு விவகாரங்கள்ல உங்களுக்கு சாதகமான தீர்ப்பு வரும். உங்களுக்கு எதிராக நின்னவங்க திடீர்னு மனசு மாறி நல்ல நண்பர்களாக மாறுவதற்கு நிறைய வாய்ப்பு இருக்குங்க. உத்தியோகத்துல நீங்க கனவு கண்ட பதவி கிடைக்க வாய்ப்பு இருக்கு. தொழில், பிசினஸ் சுமாராகவே இருக்கும்.  ஆனா அது பற்றி மனசில் நிம்மதியும் திருப்தியும் இருக்கும். அது போதும்ல.

சந்திராஷ்டமம்: மேமாதம் 22 முதல் மேமாதம் 24  வரை

சிம்மம்

வாகனங்களில் செல்லும்போது கேர்ஃபுல்லா ஓட்டுங்கப்பா. குடும்பத்தில் வரும் பிரச்சனைங்களை அநாயாசமா எதிர்கொள்ள முடியும். கொடுக்கல். வாங்கல் விஷயங்களில் கேர்ஃபுல்லா இருந்துட்டீங்கன்னா பிராப்ளம் ஏதும் இருக்காதுங்க. உத்தியோகத்தில் சக ஊழியர்களின் நட்பு கிடைக்கும். தொழில், பிசினஸில் கூடுதல் கவனம் செலுத்தி அதை பெரியளவில் கொண்டு செல்லப்போறீங்க. முடிஞ்சு போனதை நினைச்சு எப்பவும் கவலை பட வேணாங்க. இனி நடக்க போகும் விஷயங்கள் அனைத்தும் உங்களுக்கு சாதகமாகவே நடக்கும் என்பதில் உறுதியா இருப்பீர்கள். எந்த ஒரு சூழ்நிலையிலும் சுய கட்டுப்பாட்டுடன் வாழ விருப்பம் ஏற்படும். கணவன் மனைவி இடையே சிறு சிறு பிராப்ளம்ஸ் ஏற்பட்டாலும்கூட உடனுக்குடன் அதுக்கு எண்ட் கார்ட் போட்டுடுவீங்க என்பதால் குடும்பத்தில் அமைதி நிலவும். ஆன்மிகத்தில் நாட்டம் உண்டாகும். உறவினர்களின் வருகையால் ஹாப்பியாவீங்க. நட்பு வட்டம் அதிகமாகும். ஃப்ரெண்ட்ஸ் கிட்ட எதிர்பார்த்த ஹெல்ப் கிடைக்கும்.

சந்திராஷ்டமம்: மேமாதம் 24 முதல் மேமாதம் 27  வரை

கன்னி

மத்தவங்ககிட்டேயெல்லாம் பழகும்போதும் பேசும்போதும் வார்த்தையில் பொறுமையும் நிதானத்தையும் பின்பற்றுவது நல்லதுங்க. சமுதாயத்துல உள்ள விஐபிங்களோட தொடர்பு கெடைக்கும். குடும்ப வருமானம் போதுமானதா இருக்கும். மனைவி/ கணவர் வழி ரிலேடிவ்ஸால ஆதாயம் ஏற்படும். சுப விரயங்களால் பணம் செலவழியும். ஹாப்பியா இருப்பீங்க. வெளியில் லோன் வாங்காமயே சமாளிச்சுடுவீங்க. ஒரு சிலருக்கு வீடு மற்றும் வாகனம் மாற்றம் ஏற்படலாம். ஆன்மிக ரீஸன்ஸ்க்காகப் பணம் நல்லபடியா செலவாகும். வீண் விவகாரங்களில் தலையிடாம இருக்கறது நல்லதுங்க. உத்தியோகத்துல ரொம்பவே கவனமா இருந்து ஜெயிப்பீங்க. தொழில், பிசினஸ் தொடர்பான ஹெல்ப்ஸ் கிடைக்கும். வாரத்தின் பிற்பகுதியில் ஒங்க பேச்சு திறமை காரணமா நீங்க எடுக்கும் காரியங்களில் வெற்றி கிடைக்கும். சின்னச் சின்ன விஷயங்களில் கூட மன நிறைவு உண்டாகும். அடுத்தவங்களோட அட்வைஸ்களை அளவோட எடுத்துக்குங்க.

துலாம்

எகனாமிக்கலாவும் ஃபைனான்ஸ் மேட்டர்ஸ்லயும் நல்ல முன்னேற்றம் இருக்கும். லோன் பிரச்சனை படிப்படியாக குறையும். எதிர்பார்த்த பணம் கைக்கு வர சிறிது தாமதமானாலும் அதை சமாளிக்க முடியும். உடல் நலம் சிறப்பாக இருக்கும். திருமணம் போன்ற சுபகாரியம் கைகூடும். புதிய வீடு வாங்கும் முயற்சியில் நல்ல பலன் கிடைக்கும். உறவினர் வீட்டு விசேஷங்கள்ல கலந்துக்குவீங்க. மத்தவங்க பாராட்டும்படி உங்க செயல்கள் இருக்கும். உடன் பிறப்புகளுக்கு வேண்டிய ஹெல்ப்ஸ் செய்து தந்து அவங்க நெகிழ்ச்சியைப் பார்ப்பீங்க. வாழ்க்கைத் துணையின் உடல் நலத்தில் கவனம் செலுத்துவீங்க. யாருக்காகவும் சாட்சிக் கையெழுத்துப் போட்டுடாதீங்க. ப்ளீஸ். உத்தியோகத்துல மன நிம்மதி உண்டாகும். தொழில், பிசினஸ் விரிவாக்கம் தொடர்பான முயற்சி செய்ங்க. கடந்த சில தினங்களாக இருந்துக்கிட்டிருந்த உடல் உபாதைங்க குறைந்து, ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் காணப்போறீங்க.

விருச்சிகம்

உத்தியோகத்துல எதிர்பார்த்த மாதிரியெல்லாம் நடக்க ஆரம்பிக்கும். கூடுதலா சின்னதாய் ஒரு முதலீட்டுல புது தொழில் ஒண்ணைத் துவங்க முடியும். குடும்பத்துல ஒரு சில முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டிய சூழ்நிலை வரும். எதைச் செய்ய நினைத்தாலும் ஒரு முறைக்கு பலமுறை யோசித்து செய்யுங்க. கூடப் பொறந்தவங்ககிட்ட விட்டு கொடுத்து போகணுங்க. வேண்டியவர்களிடம் வீண் விவாதங்கள்ல ஈடுபட வேணாம். குடும்ப நலனில் அக்கறை எடுத்துக்குங்க. கணவன் மனைவிக்கு இடைல ஈகோ பிரச்சனையைத் தவிர்க்கறது முக்கியங்க. புது வீடு மாற்றம் ஏற்படும். உங்க வருமானத்துக்கு ஏற்றபடி செலவுங்க இருக்கும். திருமணம் சம்பந்தமான பேச்சுவார்த்தை தொடங்கும். எவ்வித பிரச்னையும் இல்லாதபடிக்கு கவனமாய்ப் பணிகளை மேற்கொள்வீங்க. தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். எல்லார் கிட்டயும் அன்பாவும், அனுசரணையாவும் நடந்துக்குங்க.

தனுசு

யாரையும் எடுத்தெறிஞ்சு பேசாம கேர்ஃபுல்லா இருந்துடுங்க. வீட்டுலயோ ஆபீஸிலோ சிறிய கருத்து மோதல்கள் உண்டாக வாய்ப்பு இருக்குங்க. உடன்பிறந்தவங்க ஹெல்ப் செய்வாங்க. எதிர்பாராத பொருள் விரயம் ஏற்பட வாய்ப்புண்டு. ஆனா அது பெரிய அளவில் உங்க மனசை பாதிக்காது. நெருங்கிய ஃப்ரெண்ட்ஸ் சிலரால் உங்களுக்கு நன்மை செயல்படலாம். பேரன்ட்ஸ் உடல் நலத்துல ரொம்பவே கவனம் தேவை. பணியிடத்தில் எதிர்பார்த்த நன்மைகள் கிடைக்கும். பார்ட்னர்ஷிப் பிசினஸ் நல்ல லாபத்தைக் கொடுக்கும். உங்களோட அனுபவ அறிவால் செல்வாக்கு நிலையை உயர்த்திக்க முடியும். புது முயற்சிங்களை தாராளமா மேற்கொள்ளலாம். குடும்பத்தில் சிறு பிரச்னை ஏற்பட்டு, பின் சீராகும். திருமண விஷயத்துல பொறுமையை கடைப்பிடிக்கறது அவசியம். குடும்பத்துல பணவரவு நல்லா இருக்கும். பேச்சுத் திறமையால மத்தவங்களை  ஈஸியாக் கவருவீங்க. பொருளாதார நிலையில் நல்ல மாற்றம் உண்டாகும். வருமானத்திற்கு ஏற்ற செலவு செய்யுங்க.

மகரம்

செலவுகள் சற்றுக் குறைவா இருக்கும். நெருங்கிய உறவினர்களுடன் சுமுகமான ரிலேஷன்ஷிப் காணப்படும். புதிய வீடு, நிலம் போன்றவற்றை வாங்கற யோகம் உண்டாகும். செல்வாக்கு, திறமை, புகழ், எல்லாம் நல்லபடியா அமையும். குடும்பத்துல ஏற்படும் சின்னச் சின்ன பிரச்னைகள்  காரணமாக கணவன் மனைவி இடையே லேசா வாக்குவாதம் வரும். அப்பிடி வராம பார்த்துக்கறது உங்க கைலதாங்க இருக்கு. உடல் நலனில் அதிக கவனம் எடுத்துக்குங்க. தூரத்து உறவினர்கள் வருகையால் நெறைய நன்மைங்க உண்டு. இழுபறியிலிருந்த சொத்து பிரச்சனைங்க ஒரு வழியா  முடிவுக்கு வரும். ரிலேடிவ்ஸ் உங்க வளர்ச்சிக்கு உறுதுணையா இருப்பாங்க. குடும்பத்துல புது நபர்களின் வருகை இருக்கும். புது வாகனம் வாங்கற யோகம் உண்டாகும். பணியில் மதிப்பும், மரியாதையும் உயரும். தொழில், வியாபார விரிவாக்க சிந்தனை வரும்போது அதுல எந்த அளவு பணம் போடலாம்னு நல்லா யோசிச்சுக்குங்க.

கும்பம்

நெருங்கின ரிலேடிவ்ஸ் கிட்ட தேவையில்லாத மனஸ்தாபங்கள் வராதபடி கேர்ஃபுலா இருங்க. மத்தவங்ககிட்ட அனுசரிச்சுப் போங்க. அப்பிடிச் செய்தா மட்டும்தான் எல்லா பிரச்சனைகளையும் சரி செய்துக்க முடியும். பொது காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். ஆக்டிவ்வா ஆவீங்க.  ஃபாரின்ல வேலை செய்துக்கிட்டிருக்கறவங்களுக்கு சீக்கிரத்துல புது பொறுப்புகள் கிடைச்சு அதனால நன்மைங்க வரும். பூர்வீக சொத்துக்கள் மூலம் லாபம் கெடைக்கும். வாழ்க்கை துணையின் உடல் நலத்தில் கவனம் தேவை. வீட்டில் அதிகமான மருத்துவ செலவுகள் வரும். உத்யோகத்தில் புதிய வாய்ப்புகள் தேடி வரும். புதிதாக தொழில் தொடங்கும் வாய்ப்புகள் தேடி வந்தால் அதுல எந்த அளவுக்குத் தீவிரமா இறங்கலாம்னு யோசிச்சுட்டு டிசைட் செய்ங்க. குடும்பப் பொறுப்புகள் அதிகமாக இருக்கும். உங்க அந்தஸ்து மதிப்பு தானாக உயரும். பொருளாதார நிலை திருப்திகரமா இருக்கும்.

மீனம்

குடும்பத்துல உறவினர் வருகையால் வீடு ஹாப்பியா களைக்கட்டும். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடைபெற வாய்ப்புள்ளது. இதனால் சுப விரயங்கள் அதிகம் ஏற்படும். ரிலேடிவ்ஸ் மூலம் அனுகூலமான பலன்கள் உண்டு. பொது பிரச்சனைங்கள்ல தலையிடாம இருப்பது ரொம்பவே நல்லது. சுப விரயங்களால் குதூகலம் விளையும். எதிர்பார்த்ததை விட அதிகம் செலவுகள் ஏற்படும். சோம்பேறித்தனத்தைத் தவிர்ப்பது ரொம்பவே நல்லது. உத்தியோகத்துல பல எதிர்ப்புகள் நீங்கி நல்ல சுமூக உறவுகள் ஏற்படும். தொழில், வியாபாரத்துல கடுமையான போட்டி நிலவும். எ தையும் வேகமாகவும் சுறுசுறுப்பாகவும் செய்து முடிக்கும் ஆற்றல் உங்க கிட்ட நிறையவே இருக்கும். பண சேமிக்க வேண்டும் என்ற எண்ணம் வரும். குல தெய்வ அருள் கிடைக்கும். இது வரை நீங்க பட்ட கஷ்டங்களுக்கு ஒரு முடிவு வரும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.