புதுடில்லி: 50 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்று கொண்டு சீனர்களுக்கு சட்ட விரோதமாக ‘விசா’ வாங்கி தந்த விவகாரத்தில் சிவகங்கை எம்.பி., கார்த்தி மற்றும் அவரது ஆடிட்டர் உள்ளிட்டோர் வீடுகளில் சி.பி.ஐ., அதிகாரிகள் சோதனை நடத்தினர். ஆடிட்டர் பாஸ்கர் ராமன் கைது செய்யப்பட்ட நிலையில், லஞ்சம் பெற்றது தொடர்பாக வலுவான ஆதாரங்கள் சிக்கி இருப்பதால், விரைவில் கைதாகலாம் என தகவல் வெளியாகியது.இந்நிலையில், டில்லி நீதிமன்றத்தில், முன்ஜாமின் கேட்டு கார்த்தி மனு தாக்கல் செய்துள்ளார்.இந்த மனு விசாரணைக்கு வந்த போது, சி.பி.ஐ., சார்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த வழக்கு தற்போது விசாரணைக்கு உகந்தது அல்ல. அவர் கைது செய்யப்பட்டால், 48 மணி நேரத்திற்கு முன்பு நோட்டீஸ் அனுப்பப்படும் எனக்கூறினார்.தொடர்ந்து நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு: கார்த்தியை சிபிஐ கைது செய்ய வேண்டும் என்றால், 3 நாட்களுக்கு முன்னர் நோட்டீஸ் அனுப்ப வேண்டும். வெளிநாட்டில் இருக்கும் அவர், நாடு திரும்பிய பின்னர் 16 மணி நேரத்திற்குள் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்றார்.
Advertisement