உலகின் நம்பர் 1 கோடீஸ்வரரான எலான் மஸ்க் விமான பணிப்பெண் ஒருவரிடம் பாலியல் ரீதியாக தவறாக நடந்து கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அதன்படி தன் மீதான தவறை மறைப்பதற்காக 2018-ஆம் ஆண்டு எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் மூலம் $2,50,000 பணம் அப்பெண்ணுக்கு கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
கடந்த 2016-ஆம் ஆண்டு அவர் தனி விமானத்தில் பறந்தபோது அங்கு இருந்த பணிப்பெண்ணிடம் பாலியல் ரீதியாக தவறாக நடந்துகொண்டார் என்று பிரபல செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டது.
இதையடுத்து அந்த தவறை மறைப்பதற்காக 2018-ஆம் ஆண்டு எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் மூலம் $2,50,000 தொகையும் கொடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த செய்தியை எலான் மஸ்க் மறுத்துள்ளார். இதுகுறித்து சமூகவலைதளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், நாம் கருத்து சுதந்திரம் பற்றி பேசி வருகிறேன். அதில் ஒருபகுதியாக பைடன் அரசாங்கத்தையும் விமர்சித்து வருகிறேன். இதனால் என்மீது அரசியல் ரீதியான தாகுதல்கள் தொடங்கப்பட்டுள்ளன.
ஆனால் இந்த அவதூறுகள் எல்லாம் என்னை சிறந்த எதிர்காலத்திற்காக போராடுவதில் இருந்தும், சுதந்திர பேச்சு உரிமை குறித்து பேசுவதில் இருந்தும் தடுக்க முடியாது.
எழுதி வைத்துகொள்ளுங்கள். என் மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு உண்மை இல்லை என தெரிவித்துள்ளார்.
கடந்த 2016ல் விமானப் பணிப்பெண் தனது நண்பரிடம் ஒரு விடயத்தை கூறியிருந்தார். அதன்படி விமானத்தில் சென்ற போது தனது அறைக்கு வருமாறு மஸ்க் கேட்டுக் கொண்டார். அங்கு சென்ற போது எலன் தன்னிடம் தவறாக நடக்க முற்பட்டார் என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.