விருதுநகர் மாவட்டத்தில் விதிமுறைகளை மீறி இயங்கியதாக 174 பட்டாசு ஆலைகளின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
பேரியம் உப்பு கலந்து பட்டாசு மற்றும் சரவெடிகளை தயாரிக்கக் கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவு முறையாக பின்பற்றப்படுகிறதா என சாத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் பட்டாசு ஆலைகளில் அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது விதிமீறல்கள் கண்டறியப்பட்ட 174 பட்டாசு ஆலைகளின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டதோடு, 405 ஆலைகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
விதிமீறல்களில் ஈடுபடும் ஆலைகளின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என விருதுநகர் ஆட்சியர் மேகநாத ரெட்டி எச்சரிக்கை விடுத்துள்ளார்.