வேலூரில் தேவாலய வாசலில் கிடந்த, பிறந்து சில மணி நேரமே ஆன ஆண் பச்சிளம் குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டது.
வேலூர் மாநகர் பகுதியில் உள்ள பிஷப் டேவிட் ஹவுஸ் எனப்படும் தேவாலயத்தின் வாசலில் இன்று காலை பிறந்து சிலமணி நேரமே ஆன ஆண் பச்சிளம் குழந்தை அழுது கொண்டிருந்ததை தேவாலயத்தின் காவலாளி பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இதையடுத்து குழந்தையை விட்டுச் சென்றவர்கள் யாரேனும் அக்கம்பக்கத்தில் இருக்கிறார்களா என தேடிய காவலாளி யாரும் இல்லாததால் இது குறித்து வேலூர் தெற்கு காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளார்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற காவல் துறையினர் குழந்தையை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் முதலுதவி சிகிச்சைக்காக அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பச்சிளம் குழந்தையை தேவாலய வாசலில் விட்டுச் சென்றவர்கள் யார் என்பது குறித்து வேலூர் தெற்கு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM