திருப்பதி:
திருப்பதி மாவட்டம், ஸ்ரீகாளஹஸ்தி அடுத்த முச்சுவேல் கிராமத்தை சேர்ந்தவர் மூர்த்தி. இவரது மகள் வந்தனா (வயது 20). இவர் தொட்டம்பேடு அடுத்த பொய் கிராமத்தில் கிராம செயலாளராக வேலை பார்த்து வந்தார்.
வந்தனாவும், ஸ்ரீகாளஹஸ்தியில் உள்ள குமரத் தெருவைச் சேர்ந்த மோகனின் மகன் சந்தீப் (24) என்பவரும் கடந்த சில நாட்களாக காதலித்து வந்தனர். சந்தீப் உறவினர் என்பதால் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருந்தனர்.
நேற்று முன்தினம் இரவு வந்தனா பணிக்கு சென்று விட்டு வீட்டுக்கு திரும்பி வந்த போது காதலன் சந்தீப் வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு என்ன நடந்தது? எனத் தெரியவில்லை. சிறிது நேரத்தில் சந்தீப் வீட்டில் இருக்கும் போதே அங்குள்ள கழிவறையில் வந்தனா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதனை பார்த்த அதிர்ச்சி அடைந்த சந்தீப் ஸ்ரீகாளஹஸ்தி 2டவுன் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். இன்ஸ்பெக்டர் பாஸ்கர் நாயக் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று வந்தனாவின் பிணத்தை மீட்டு ஸ்ரீகாளஹஸ்தி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கிராம செயலர் வந்தனா மர்மமான முறையில் உயிரிழந்ததாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.