பெங்களூரு: கர்நாடகாவில் கடந்த பிப்ரவரியில் பள்ளி, கல்லூரிகளில் ஹிஜாப் (தலை முக்காடு) அணிய தடை விதிக்கப்பட்டது. இதனை உயர் நீதிமன்றம் ஏற்று கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிய தடை விதித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரக்கணக்கான மாணவிகள் 10 மற்றும் பியூசி இறுதி தேர்வை புறக்கணித்தனர்.
இந்நிலையில் கர்நாடக கல்வித் துறை வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், “சமத்துவம், ஒற்றுமை, பொது ஒழுங்கை கடைபிடிக்கும் நோக்கில் 2022-23-ம் கல்வி ஆண்டு முதல் பியூசி மாணவ, மாணவிகள் கட்டாயம் சீருடை அணிய வேண்டும். ஹிஜாப் உள்ளிட்ட மத அடை யாளத்தை வெளிப்படும் உடை அணிந்து வர அனுமதி இல்லை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.