10,000 பேர் பணிநீக்கம்.. அதிர்ச்சி கொடுக்கும் நிறுவனங்கள்.. ஊழியர்கள் கண்ணீர்..!

இந்தியாவில் கொடிகட்டிப் பறந்து வரும் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் தற்போது அமெரிக்க முதலீட்டுச் சந்தையில் ஏற்பட்ட தடுமாற்றத்தாலும், டெக் பங்குகளின் வீழ்ச்சி காரணமாகவும் இந்திய ஸ்டார்ட்அப் சந்தையில் முதலீடுகள் குறைந்துள்ளது.

இதேவேளையில் இந்தியாவில் டிஜிட்டல் சேவை துறையில் அதிகளவில் முதலீடு செய்து வந்த நிறுவனங்கள் பண இருப்பு இல்லாத காரணத்தாலும், புதிய முதலீடுகளைப் பெற முடியாத நிலை உருவாகியுள்ளதாலும் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யத் துவங்கியுள்ளது.

ஸ்டார்ட்அப் நிறுவனங்கள்

2022ஆம் ஆண்டுத் துவக்கம் முதல் இந்தியாவின் முன்னணி ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் பல ஊழியர்களை அடுத்தடுத்துப் பணிநீக்கம் செய்து வருகிறது. இதனால் ஊழியர்கள் மத்தியில் அச்சம் அதிகரித்துள்ளது. குறிப்பாக அமெரிக்க டெக் மற்றும் ரீடைல் பங்குகள் சரிவைத் தொடர்ந்து இந்திய ஐடி நிறுவனப் பங்குகள் அதிகளவிலான சரிவை எதிர்கொண்டது.

பணிநீக்கம் எண்ணிக்கை

பணிநீக்கம் எண்ணிக்கை

கார்ஸ்24 – 600 ஊழியர்கள்
வேதாந்து – 424 ஊழியர்கள்
Unacademy குரூப் – 1000 ஊழியர்கள்
ட்ரெல் – 300 ஊழியர்கள்
லிடோ – 200 ஊழியர்கள்
furlenco – 180 ஊழியர்கள்
மீஷோ – 150 ஊழியர்கள்
ஓகேகிரெடிட் – 40 ஊழியர்கள்
Whitehat Jr- 1000 ஊழியர்கள்
பிளிங்க்இட் – 1600 ஊழியர்கள்
பெட்டர்.காம் (இந்தியா) – 3000 ஊழியர்கள்
ஓலா – 2100 ஊழியர்கள்

முக்கியப் பிரச்சனைகள்
 

முக்கியப் பிரச்சனைகள்

வட்டி விகித உயர்வு, வர்த்தகச் சரிவு, பணவீக்கம், டெக் பங்குகளின் உலகளாவிய வீழ்ச்சி ஆகியவற்றின் மூலம் ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் முதலீடு செய்வதை அதிகளவில் குறைத்துள்ளது தனியார் பங்கு முதலீடு நிறுவனங்கள். இதனால் பணத் தேவை கொண்ட ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் தொடர்ந்து இயங்க முடியாத நிலை உள்ளது.

 புதிய முதலீடுகள்

புதிய முதலீடுகள்

இந்த இக்கட்டான சூழ்நிலையில் புதிய முதலீடுகளை நம்பி இருக்கும் நிறுவனத்தில் அதிகளவிலான ஊழியர்கள் பணிநீக்கம் செய்து செலவுகளைக் குறைக்க தொடர்ந்து வர்த்தகத்தை நடத்த முடிவு செய்துள்ளது. இதன் வாயிலாகத் தான் அதிகளவிலான பணிநீக்கம் ஏற்பட்டு உள்ளது.

பிக்-டிக்கெட்

பிக்-டிக்கெட்

இந்திய ஸ்டார்ட்அப் துறையில் 2022 துவக்கம் முதலே பிக்-டிக்கெட் முதலீடுகள், அதாவது பெரும் தொகை கொண்ட முதலீடுகள் அதிகளவில் குறைந்துள்ளது. மேலும் இந்த மோசமான முதலீட்டுச் சூழ்நிலை அடுத்த 6 மாதம் முதல் 12 மாதம் வரையில் நீடிக்கவும் வாய்ப்பு உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

More than 10000 people have been layoff from Indian startups

More than 10000 people have been layoff from Indian startups 10,000 பேர் பணிநீக்கம்.. அதிர்ச்சி கொடுக்கும் நிறுவனங்கள்.. ஊழியர்கள் கண்ணீர்..!

Story first published: Friday, May 20, 2022, 22:17 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.