Redmi Note 11T Series: அடுத்த ஆட்டத்துக்கு தயாராகும் ரெட்மி – கசிந்த புதிய தகவல்கள்!

Redmi Note 11T Series:
ரெட்மி நோட் 11டி
ப்ரோ+ மற்றும்
ரெட்மி
நோட் 11டி ஸ்மார்ட்போன்கள் மே 24 அன்று அறிமுகப்படுத்தப்படும் என்று
சியோமி
தகவல் வெளியிட்டுள்ளது. இந்த தகவலை சீன நிறுவனம் Weibo- தளத்தில் பகிர்ந்துள்ளது.

ரெட்மி நோட் 11டி ப்ரோ சீரிஸ் போன்கள் இரண்டும் டர்போ-லெவல் செயல்திறனைப் பெறும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. கூடுதலாக, Redmi Note 11T Pro+ இரண்டு நிறங்களில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதில் மூன்று பின்புற கேமரா அமைப்பு இருக்கும் என்று கூறப்படுகிறது. அறிக்கைகளின்படி, ரெட்மி நோட் 11டி ப்ரோ சீரிஸ் போகோ பிராண்டிங்குடன் உலகளாவிய சந்தைகளுக்கு கொண்டு வரப்படலாம் என்று கூறப்படுகிறது.

VIP Number: விஐபி நம்பரை வீட்டுக்கே வந்து இலவசமாக தரும் வோடபோன் ஐடியா!

புதிய ரெட்மி போன் வெளியாகும் தேதி

சீன மைக்ரோ பிளாக்கிங் தளமான ரெட்மியின் அதிகாரப்பூர்வ வெய்போ கணக்கில், சீனாவில் ரெட்மி நோட் 11டி ப்ரோ பிளஸ் மற்றும் ரெட்மி நோட் 11டி அறிமுகம் குறித்த தகவலைப் பகிர்ந்துள்ளது.

Made in India: மலிவான 4ஜி போனை வெளியிட்ட லாவா – ஆனா அம்சங்கள் டாப் டக்கர்!

வெளியீட்டு விழா இந்திய நேரப்படி மே 24ஆம் தேதி மாலை 4.30 மணிக்கு தொடங்கும் என்று வெய்பூவில் வெளியான சமீபத்திய டீசர்களில் இருந்து இது தெரியவந்துள்ளது. அதிகாரப்பூர்வ அறிமுகத்திற்கு முன், Xiaomi சீனாவில் Redmi Note 11T Pro+, Redmi Note 11T Pro க்கான முன்பதிவுகளைப் பெறத் தொடங்கியுள்ளது.

JioPhone Next: மிகப்பெரும் தள்ளுபடி விலையில் ஜியோ 4ஜி போன் – விலைய பாத்து ஷாக் ஆகிடாதீங்க!

ரெட்மி நோட் 11டி சீரிஸ் அம்சங்கள் (Redmi Note 11T Series Specifications)

Redmi Note 11T Pro + மற்றும் Redmi Note 11T Pro ஆகியவை சீனாவின் சான்றிதழ் இணையதளமான TENAA இல் கடந்த மாதம் காணப்பட்டன. இந்த மாடல்கள் ரெட்மி நோட் 12 ப்ரோ சீரிஸைச் சேர்ந்தவை என்று முன்பு கூறப்பட்டது.

5G In India: வெளியானது 5ஜி அறிவிப்பு – செப்டம்பர் முதல் சேவை தொடங்கும்!

ரெட்மி நோட் 11டி ப்ரோ பிளஸ் ஆனது TENAA பட்டியலிலிருந்து 4300mAh பேட்டரியுடன் வருகிறது. இந்த ஃபோன் மாடல் எண் 22041216UC உடன் பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஆனது 4980mAh பேட்டரியைக் கொண்டிருக்கும் என்பதையும் பட்டியல் வெளிப்படுத்துகிறது.

Call Recording: உங்கள் அழைப்பு ரகசியமாக பதிவுசெய்யப்படலாம் – எப்படி கண்டுபிடிப்பது?

ரெட்மி நோட் 11டி போனின் மாடல் எண் 22041216C ஆக காணப்பட்டது. இதில் 6.6″ இன்ச் AMOLED டிஸ்ப்ளே இருக்கிறது. இதன் ரெப்ரெஷ் ரேட் 120 ஹெர்ட்ஸ் ஆக உள்ளது. இது ஒரு முழு அளவு எச்டி பிளஸ் அமோலெட் பேனலாகும்.

செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸ் ‘சமயம் தமிழ்’ பக்கத்தை பின் தொடருங்கள்

கூடுதலாக, ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 12 அடிப்படையிலான MIUI 13 உடன் வருகிறது. Xiaomi Redmi Note 11T Pro Plus மற்றும் Redmi Note 11T Pro ஆகியவை மீடியாடெக் டிமென்சிட்டி (MediaTek Dimensity) 5ஜி சிப்செட்டுடன் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.